இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்
என்னிடம் வந்து கவிதை கேட்கிறாய்,
‘நீ”
என்பதைத்தவிர நான் என்ன சொல்ல…..
———————————————————————————–
காயம்பட்ட என் கைக்கு
நீ முத்தம் கொடுத்தாய்….
அட ஆயிரம் தடவைகூட காயம்படலாம் போலிருக்கிறது…..
———————————————————————————–
மழை நேரத்து தேநீர்,
பூக்கள் உதிர்ந்த சாலை,
அதிகாலை நேரத் தூக்கம்,
இவற்றையெல்லாம் விட சுகமானது உன் காதல்…..
———————————————————————————–
உனக்காகவே காத்திருக்கும்
நம் வீட்டு நாய்குட்டி,
நீ சோம்பல் முறிக்கும் கட்டில்,
நீ கோலம் போடும் முற்றம்,
கோபம் வந்தால் நீ உடைத்தெறியும் பூந்தொட்டி,
எப்போதும் சண்டைபோட நான் ……..
———————————————————————————–
நான் தனித்து நடந்த சாலைகளில்
இனி நீயும் என்னோடு……
———————————————————————————–
உன் கைகள் பற்றி
நீண்ட பாதைகளின் வழியே
என் தோள்களில் நீ தலை சாய்த்து
நடந்து கொண்டே பேச
ஆயிரம் கதைகள் உண்டு என்னிடம்……
———————————————————————————–
இனி நீ வரும் வரைதான்
காகிதங்களோடு என் உறவெல்லாம்…
நீ வந்தபின் எதற்கு இந்த கவிதைகள்….
காகித கப்பல் செய்து மழைநீரில் விளையாடுவோம் வா……
———————————————————————————–