நான் விரும்பும் காந்தி

- Advertisement -


குறிப்புச் சட்டகம்


முன்னுரை

பிறப்பும் இளமைப் பருவமும்

காந்தியடிகள் நடத்திய போராட்டங்கள்

என்னை ஈர்த்த காந்தியின் பண்புகள்

காந்தியின் பொன்மொழிகள்

காந்தியின் நினைவிடங்கள்

முடிவுரை


முன்னுரை:

அண்ணல் காந்தி பிறந்த நாள் அக்டோபர் 2. “தோன்றின் புகழொடு தோன்றுக” என்ற குறள் அடிக்கு ஏற்றார் போன்று ஒரு மனிதராய் பிறந்து தன்னை “மாமனிதராக” மாற்றிக்கொண்ட தேசப்பிதா அன்னல் காந்தி என போற்றப்படும் காந்தித்தாத்தாவை பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.
பிறப்பும் இளமைப் பருவமும்:குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் எனும் ஊரில் 1869 அக்டோபர் 2ஆம் தேதி பிறந்தார் இவரது வரது இயற்பெயர் மோகன்தாசு கரம்சந்த் காந்தி. தந்தை பெயர் கரம்சந்த்  காந்தி. தாயார் பெயர் புத்திலிபாய் அம்மையார். 13 ஆம் வயதிலேயே கஸ்தூரிபாயை மணந்தார். பதினாறாம் வயதில் பள்ளியில் கல்வி பயின்று கொண்டிருந்த போதே  கரம்சந்த் காந்தி இறந்து போனார். அதன்பின் 19 வயதில் தான் பாரிஸ்டர் படிக்கச் சென்றார்.

காந்தியடிகள் நடத்திய போராட்டங்கள்:

தண்டி யாத்திரை:1930 மார்ச் 12ஆம் நாள் தொண்டர்களுடன் குஜராத் கடற்கரை மீதான 200 மைல்கள் தூரத்திலுள்ள தண்டி எனும் கிராமத்திற்கு தண்டி யாத்திரை மேற்கொண்டார் மஹாத்மா காந்தி.
வெள்ளையனே வெளியேறு இயக்கம்:ஆர்த்தி 942 இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இது ஆகஸ்ட் புரட்சி என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலேய அரசை அடிபணிய வைத்து பேச்சுவார்த்தை மேசைக்கு அழைப்பதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது.

என்னை ஈர்த்த காந்தியின் பண்புகள்:

காந்தி தாத்தாவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான அம்சம் எளிமை. எளிமை தான் உண்மை என்பதை அவர் தனது வாழ்க்கையின் மூலம் நிரூபித்துள்ளார். காந்தி தாத்தாவிடமிருந்து நாம் பின்பற்ற வேண்டிய மற்றொரு விஷயம் அவரின் சகிப்புத்தன்மை. மகாத்மா காந்தி உலகம் திரும்பிப் பார்க்க காரணம் அவரது கொள்கைகளும் கோட்பாடுகளும் தான். ஒரு மனிதன் இது போன்று வாழ முடியுமா என்று அனைவரையும் வியக்க வைத்தவர். இதுவே என்னை ஈர்த்த காந்தியின் சிறப்பு பண்புகளாகும்.

காந்தியின் பொன்மொழிகள்:

(1) எந்த வகையிலும் கல்வி பெறுவதற்கான முதல் தேவை ஆர்வம் மற்றும் கேள்வி கேட்கும் திறனும் தான்.

(2) நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் அன்பு மற்றும் சமாதானம் கொண்டு வாழ்ந்தால் உலகத்தின் வடிவம் மாற்றியமைக்கப்படும்.

(3) உங்களை நீங்களே அறிந்து கொள்வதற்கான வழி சேவையில் உங்களையே நீங்கள் மறப்பது தான்.

(4) கல்லும் சுண்ணாம்பும் கொண்டு ஆலயம் கட்டுவதை விட தீண்டாமையை ஒழிப்பது எவ்வளவோ பெரிய புண்ணிய காரியமாகும்.

(5) தீண்டாமை உண்டு என்றால் சுயராஜ்யம் கிடையாது. நாம் சுயராஜ்யத்தையும் தீண்டாமையும் ஒருசேர வைத்துக் கொள்ள முடியாது.

காந்தியின் நினைவிடங்கள்:

மகாத்மா காந்தி நினைவு மண்டபம் – கன்னியாகுமரி

மகாத்மா காந்தி அருங்காட்சியகம் – மதுரை

மகாத்மா காந்தி சமாதி – டெல்லி

மகாத்மா காந்தி பூங்கா – தமிழ்நாடு (பாளையங்கோட்டை)

மகாத்மா காந்தி கோயில் – தமிழ்நாடு (பாளையங்கோட்டை)

முடிவுரை:

அண்ணல் காந்தி பிறந்த நாள் நம் நாட்டிற்கு விழிந்த நாள்அனைவரும் சமம் என்னும் பேச்சு அனைத்து கடவுள்களும் அவர் மூச்சுஎன் அவரை வர்ணித்துக் கொண்டே செல்லலாம்.

மறைவு:

1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் நாள் கோட்சே என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் தன் உயிரை நம்ம தாய் நாட்டிற்காக நீத்தார். உலகமே திரும்பிப் பார்த்த தலைவர்களில் ஒருவர் காந்தி. காந்தி மறைந்தாலும் அவரின் புகழ் உலகம் முழுதும் மணம் வீசி வருகிறது.

ஜே சௌந்தர்யா 

பத்தாம் வகுப்பு

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -