நான் விரும்பும் காந்தி

- Advertisement -


கட்டுரைப் போட்டி

காந்தியடிகள் தமக்கென வாழாது பிறருக்காக வாழ்ந்த உத்தமர்களுள் ஒருவராவார். காந்தியடிகள் வட இந்தியாவிலே குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் எனும் கிராமத்தில் கரம்சந்த் காந்திக்கும் புத்திலிபாய்க்கும்  மகனாக பிறந்தார். இவரின் பிள்ளைத் திருநாமம் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஆகும்.

மகாத்மா காந்தி இந்திய விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய மாபெரும் போராட்ட வீரராவார். “சத்தியாக்கிரகம்” என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம், இந்திய மக்களிடையே விழிப்புணர்வையும் இந்திய நாடு விடுதலையையும் ஏற்படுத்த முக்கிய காரணமாக அமைந்தது. இதனால் இவர் “விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை” என போற்றப்பட்டார்.

இவர் அகிம்சை எனும் வன்முறையற்ற மந்திரத்தை உலகத்திற்கு வித்திட்ட உன்னத மனிதராவார். இந்தியாவின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி விடுதலைக்கு காரணமாக இருந்தார். இவரது தியாகத்தை நினைவு கூறும் வகையில் வருடம் தோறும் இவரது பிறந்த நாளான அக்டோபர் மாதம் இரண்டாம் திகதியை காந்தி ஜெயந்தியாக உலகம் முழுவதும் கொண்டாடுகிறோம்.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பள்ளியில் படிக்கும்போதே நேர்மையான மாணவனாக, அரிச்சந்திரன் நாடகம் , சிரவண நாடகம் போன்றவற்றைப் பார்த்து நல்லொழுக்கங்களை பேசுபவராக விளங்கினார். தனது 13 ஆம் வயதிலேயே கஸ்தூரிபாயை திருமணம் செய்துகொண்ட காந்தி அவர்கள் பதினெட்டாம் வயதில் பாரிஸ்டர் எனப்படும் வழக்கறிஞர் கல்விக்காக இங்கிலாந்து சென்றார்.

இங்கிலாந்து சென்ற பொழுது இவரது தாயார் இவருக்கு பல அறிவுரைகளைக் கூறினார். இவற்றுள் “மது அருந்தாதே”,  “பொய் சொல்லாதே” என்பன முக்கியமானவையாகும். இவ்வாறு உரைகளை மனதில் கொண்டு வாழ்ந்தார். தன்னுடைய கல்வியை முடித்து பாரதம் திரும்பிய காந்தி, பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 

தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்து வந்த இந்தியர்களை, வெள்ளையர்களும் வெள்ளையர் அரசாங்கமும் தாழ்வாக நடத்தியதை கண்டு அவர்களது துன்பங்களைப் போக்க சத்தியாகிரக வழியில் நின்று துயர் துடைத்து வெற்றியும் கண்டார். மேலும் 1984 ஆம் ஆண்டு இந்திய காங்கிரஸ் எனும் கட்சியை தொடங்கி அவரே பொறுப்பாளர் ஆனார்.

1906 ஆம் ஆண்டு ஜோகனஸ்பர்க் என்ற இடத்தில் அகிம்சை வழியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டு பலமுறை சிறை சென்றார். இவரது பெற்றோர் பெருஞ்செல்வர்களாக இருந்த போதும், இவர் கைராட்டினம் கொண்டு நெய்யப்பட்ட கதர் உடைகளை அணிந்து எளிமையான வாழ்க்கை நடத்தி வந்தார்.

1930 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்தது. இதனை ஏற்க மறுத்த காந்தியடிகள் கடும் போராட்டத்தின் மத்தியில் உப்புசத்தியாகிரகம் என்னும் நிகழ்வை தொடங்கியபின் ஆங்கில அரசு விதித்த உப்பு வரியை திரும்பப் பெற்றுக் கொண்டனர். 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் திகதி ஆங்கில அரசுக்கு எதிராக “ஆகஸ்ட் புரட்சி” என்று அழைக்கப்படும் “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தினை காந்தி தொடங்கி வைத்தார். காந்தியின் இடைவிடாத போராட்டத்தால் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய சுதந்திரப் பிரகடனம் அரங்கேறியது.

காந்தி அடிகள் எழுதிய “சத்தியசோதனை” அவரது சுயசரிதை ஆகும். இந்நூல் மூலம் அவரது வாழ்க்கை வரலாற்றை அறியலாம்.
“இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாணநன்னயம் செய்து விடல்”
என்ற வள்ளுவர் வாக்கு அமைய வாழ்ந்து காட்டியவர், அஹிம்சை எனும் வார்த்தைக்கு அர்த்தம் சொன்ன காந்தியடிகள். 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் நாள் புது தில்லியில் நாதுராம் கோட்சே என்னும் கொடியவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

ஆங்கில ஆட்சிக்கு எதிராகவும் இந்திய விடுதலைக்காகவும் அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு, உப்பு சத்தியாகிரகம், வழி கோட்பா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு என பல போராட்டங்களை அறவழியில் நடத்தி துப்பாக்கி ஏந்தி தன்னுடைய முரட்டுக் கரங்களால் அடக்கி ஒடுக்கிய வெள்ளையர்களை திகைக்கச் செய்தவர். பாரத நாட்டிற்காக தன்னுடைய உயிரையும் காணிக்கையாக்கி விடைபெற்றுச் சென்றார். 

பெயர்:- மயில்வாகனம் சாயிநேதாஜி
வயது:- 12
பிறந்த தேதி:- 2009.10.31 
இடம்/ ஊர்:-தலவாக்கலை, இலங்கை

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -