படிப்பறை
சினிமா
2021- தமிழ்த்திரைப்படங்கள் ஒரு பார்வை
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் இறுதியில் அவ்வாண்டு வெளிவந்த தமிழ் சினிமாக்களில் முக்கியமான (என் பட்டியலுக்குட்பட்ட) திரைப்படங்களை வரிசைப்படுத்தி பரிந்துரைப்பேன். இதில் சில உடன்பாடுகளும் முரண்களும் இருக்கக்கூடும். இது தரவரிசை அல்ல; என் வரிசை மட்டுமே. கலை வெறும் பொழுதுபோக்குக்கான வணிகம் மட்டுமல்ல; கலை வாழ்வின் குரல்; பதிவு செய்வதன் மூலம் மனிதர்களையும் வாழ்வியலையும் தமக்குள் செதுக்கிக் கொள்ளும் கலை வடிவம் சினிமா.
மாடத்தி
மாடத்தி எனும் சிறுதெய்வத்தின் கதை. வாழ்ந்து தேய்ந்து கொண்டிருக்கும் மாடத்திகளின் கதை. இன்னும் ஏன் இப்படியே இருக்கிறோம் என வெட்கப் படவைக்கும் படம். என்று நாம் மனிதர்கள் ஆவோம்?
டாக்டர் – திரைவிமர்சனம்
ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு சுமூக நிலை திரும்பினாலும் மக்கள் கூடும் பொது இடங்கள் பழைய நிலைக்கு திரும்ப பல காலம் ஆகலாம் என்று தோன்றுகிறது. அப்படிப்பட்ட நிலையிலும் பல கலைஞர்கள் ஒன்றுகூடி திரையரங்குகளை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள தங்களது கலைப் படைப்புகளை வெளியிட முன் வருவது ஒரு பாராட்டத்தக்க விஷயமாகும். அந்த வகையில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன் மற்றும் பலர் நடித்த "டாக்டர்" படம் வெளிவந்துள்ளதை பாராட்டி அதன் விமர்சனத்தையும் இங்கே காண்போம்.
நெஞ்சம் மறப்பதில்லை – திரைப்பட விமர்சனம்
செல்வராகவன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா, ரெஜினா கசாண்ட்ரா, நந்திதா ஸ்வேதா மற்றும் பலர் நடித்த நெஞ்சம் மறப்பதில்லை படம் இந்த வாரத்தில் வெளியாகியுள்ளது. இந்த படம் ஒரு உளவியல் திகில் (psychological thriller) வகையைச் சேர்ந்தது என்று பரவலாக பேசப்பட்டு வந்தாலும்...