இரவு ஆரம்பித்தபோது
மதிலில் நிற்க ஆரம்பித்தாய்
யாரைக் காண?
அதிகாலை மூன்று மணியளவில்
உன் அழகை படம் பிடித்தேன்
அப்போதும் நீயென்னை திரும்பி பார்க்கவில்லை
உன் பார்வைக்காக நான் விழித்திருக்க
உன் நிழல் கூட என் மீது விழவில்லை என்பதால்
அந்த ஏக்கத்தில் நிழற்படம் எடுத்தேன்
இன்றும் அதிகாலை உனைக் காண்பேன்
அப்போதாவது சொல் யாருக்காக நிற்கிறாய் என்று?
அழகிய புறாவே !!
மின்கிறுக்கல் குழுமத்திற்கு நன்றிகள் பல. கவிதை வெளிவந்ததில் மிக்க மகழ்ச்சி.
அனைவர்க்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.