ஒரு மழைநாளாக இருக்கவேண்டும்
ஆழ்ந்த உறக்கத்திலிருந்தவனுக்கு
துயரமான பாடலொலிக்கிறது
திடுக்கிட்டு விழித்தெழுந்தேன்
மயங்கியநிலையிலிருந்து
இருட்டைத் தூழவினேன்
தாழ்வாக பறந்துசென்ற ஒரு வண்டில் கை பட்டிருக்கவேண்டும்
சமயலறைக்குச் சென்றுபார்த்தேன்
இரண்டு டம்ளர் நீரினை மடக்கென்று குடித்தேன்
வீட்டுக்கதவை திறந்து பார்க்கலாமா யோசனைத் தோன்றியது
அந்த நேரத்திற்கான வாகன இரைச்சல்தான்
பாடல் எங்கிருந்துதான் வந்திருக்கும்
இறையே உன்னை நினைக்கிறேன்
போர்வையை தலைமூடி இழுத்துப் படுத்துக்கொண்டேன்
துயரமான பாடலைத் தேடி உறங்கிப்போகிறேன்
அன்பிலொரு புன்னகை துளிர்க்கிறது
நான் காணாமல் போக…
நிச்சயமாக ஒரு நாள் நடக்கும்
இந்த ஒருநாளிலிருந்து
அந்த ஒருநாளைத் தொடரவேண்டும்
உன்னுடனான விளையாட்டில்
ப்ரியங்களை பதியமிட
இது இதுவெல்லாம் நீ என்று சொல்லாத அன்பில் நில் என்கின்றாய்
கண்களை மூடித்திறக்கிறேன்
தனிப்பெருங்கருணை ஒளியாய்
நீயே அழைத்துச்செல்கிறாய் யமுனா.
யமுனா வீடு -44
தொடர் கவிதை