யமுனாவீடு -67

தொடர் கவிதை

- Advertisement -

நான் என்ன பார்க்கிறேன்
தெரியாது

என்ன பார்க்கிறேன் என்று
நீ கேட்கிறாய்
தெரியாது என்கிறேன்

தெரியாது என்பது பதிலல்ல
அங்கொரு பறவையிருக்கலாம்
என்கிறாய்

ஆமோதிக்கிறேன்
அங்கொரு பறவையிருந்திருக்கலாம்

ரகசியமாகவே கூப்பிட்டுப்பார்க்கிறேன்
அங்கு நீ என்ன பார்த்தாயென்று

அவள் பார்த்த பறவையிருந்தது
என்கிறாய்

வேறொரு கேள்வியெழுப்பினாய்
அவசியமானதொன்று

பொதுவாக
ஏதாவது ஒரு கணக்கைச்சொல்லலாம்
ஆனால் ஒரு உண்மையைச் சொல்கிறேன்

தெரியாது

உனக்குத் தெரியாது

உன்னிடம்
ஒப்புக்கொடுக்கிறேன்
எந்த ஒரு சங்கடமுமில்லை

பறவையைப்போல
சிறகைவிரித்துப் பறந்துபோக
என்னைத்தான் தண்டித்துக்கொள்கிறேன்
யமுனா.

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -