நெய்வேலி பாரதிக்குமார்

Avatar photo
1 POSTS0 COMMENTS
நெய்வேலி பாரதிக்குமார் என்கிற புனைப்பெயரில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதிவரும் ச.செந்தில்குமார் என்.எல்.சி. நிறுவனம் சுரங்கத்தில் துணை முதன்மை மேலாளராக (ACM) பணிபுரிகிறார்.. நான்கு சிறுகதைத் தொகுதிகள், மூன்று கவிதைத் தொகுதிகள், ஒரு குறுநாவல், ஏழு கட்டுரை நூல்கள் உட்பட மொத்தம் 17 புத்தகங்கள் வெளிவந்துள்ளன . அமேசான் கிண்டிலில் மின்னூல் ஒன்று வெளிவந்துள்ளது. இரண்டு குறும்படங்களை இயக்கியுள்ளார். ஒரு ஆவணப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இவரது விழிப்புணர்வு கதைகளை தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை விளம்பரப் படமாக தயாரித்து வெளியிட்டு இருக்கிறது. இரண்டு திரைப்படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார். பொதிகைத் தொலைக்காட்சியில், இவரது சிறுகதை நாடகமாக ஒளிபரப்பானது. ,புதுவை வானொலியில் மூன்று நாடகங்கள் ஒலிபரப்பாகியுள்ளன இதுவரை 35க்கும் மேற்பட்ட இலக்கியப் போட்டிகளில் பல்வேறு பரிசுகள் பெற்றவர். திருவில்லிபுத்தூர் கலை இலக்கியப் பேரவை சார்பில் சிறந்த எழுத்தாளர் விருது, நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி சிறந்த எழுத்தாளர் விருது, சௌமா இலக்கிய விருது 2021, சேலம் தாரைப் புள்ளிக்காரர் அறக்கட்டளை சார்பில் இலக்கிய விருது, தமிழ்த்தென்றல் இலக்கிய விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

படைப்புகள்