Myindia.sg கவிதைப்போட்டி 2021

ஆறுதல் பரிசு

- Advertisement -

வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்

வாழ்க்கை எனும் அழகியப் பக்கத்தில்
வறுமை எனும் கூர்முனை எழுதிய
அழுக்குக் கவிதை தான் பசி!

இன்னொருவர் பசிக்கக் கேட்பின்
இறந்தேனும் தருதல் தகைமை.

பசித்தவனுக்கு இடனறிந்து
பகிர்ந்து தருகையில் – அவன்
பட்டினி பறந்திடும்!
இங்கே இறைமாட்சி ஓங்கிடும்!

வாழ்வதற்காகப் பிறந்து வயிற்றுக்காகப் போராடுவதே வாழ்க்கையாகிவிட்டது இந்த பஞ்சம் சூழ் பூமியில்!

ஏழைப் பிள்ளைகளின் விலா எலும்புகளில்
ஏறி இறங்கி விளையாடுகிறது பசி!
சேறு மிதிக்கும் விவசாயி குடும்பத்தின்
சோகம் தெரிக்குது சோற்றில் குழம்பாய்!

விளைந்ததை மதித்து
விதைத்தவன் வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்!

பஞ்சம் இல்லா ஜெகத்தினைப் படைக்க
பாமரன் வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்!

பொன்மணி தர்மா
பொன்மணி தர்மாhttps://minkirukkal.com/author/ponmanivalluvan/
என் பெயர் பொன்மணி தர்மா, நான் மன்னார்குடி அருகே உள்ள கீழத்திருப்பாலக்குடி என்ற கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து, இளங்கலை பொறியியல் பட்டம் பெற்று தற்போது சிங்கப்பூரில் கடந்த இரண்டு வருடங்களாக பணிபுரிகின்றேன். சிறுவயதில் இருந்தே புத்தகங்கள் படிப்பது, கவிதை எழுதுவது போன்ற பழக்கங்கள் வழக்கமாக உள்ளது. கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் கடிதம் மூலம் கிடைத்த வாழ்த்தும் ஊக்கமும் என்னை கவிதையில் வழிநடத்துகிறது. கவி கலைமணி, கவிநிலா போன்ற விருதுகளும் பெற்றுள்ளேன்.

2 COMMENTS

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -