இந்தப்பொழுது
அழகானதாக தொடங்குகிறது
வண்ணங்களைக் குழைத்த உடை அணிந்த மனிதர்களைப்
பரந்த வெளியெங்கும் காண்கிறாள் யமுனா
அன்றாடமும் இப்படித்தான்
வண்ண மனிதர்களைப் பார்த்து
வெறுமையைத்
துரத்தப்பழகியவள்
அவளுக்கான உலகத்தில்
உரையாடுகிறாள் பார்க்கும் ஓரிருவர்
எப்போதாவது வரும் அலைபேசி அழைப்பு
சுற்றித்திரியும் பறவை, விலங்கு
தனித்திருக்கும் தனக்குள்ளுமென
அமைதியடைகிறாள்
முகம் மலர்ந்து பணிசெய்தல்
அவள் சொல்லும் வார்த்தைகள்
உள்ளார்ந்து புலப்படும் ஒளியினைக் கண்டுகொண்டு
எல்லாப் பக்கங்களிலும் அன்பொன்றைப் போதிப்பவளுக்கான காலம் வெகு தொலைவிலுள்ளது
இப்போதுதானே நடக்க ஆரம்பித்திருக்கிறாள்
சென்றடையும் பொழுதில்
நம்மில் ஒருவர் வரவேற்கும் முகமாய் அங்கிருப்போம்
யமுனா வீடு – 33
தொடர் கவிதைகள்