மீள்

கவிதை

- Advertisement -

திரும்பும் திசை எங்கும் ஓலம்
பார்க்கும் கண்களில் கண்ணீர்
நேயம் மருகி வஞ்சகம் குடி கொண்டு
அரக்கனாக ஆடும் மானிட உலகம்…!

கொடிய நோயெனவும் இயற்கை
அனர்த்தம் எனவும் மனித மோதல்
எனவும் காணும் இடமெடல்லாம்
நிரம்பி வழியும் மனித உடல்கள்…!

நாகரீகமெனும் எனும் பெயரில்
அழகிய புடவையை நான்காய் கிழித்து அங்காங்கே அரை நிர்வாணமாய் அலையும்
ஆரம்பகாலமதை உயிர்ப்பிக்கும் மானிடன்…!

உணர்வுகள் புதைத்து சுயம் தொலைத்து
அனைத்துமே தனக்கென்று அடங்காத
ஆசையில் பணமென்றால் போதுமென்று
உறவை விடுத்து மடையனாய் ஓடுகின்றான்…!

உயிர் பிரிந்தால் அரை ஞான் கயிறு
கூட எனக்கில்லை என்ற நிலை மறந்து
சூட்சுமமாய் சூழ்ச்சிகள் செய்து பிறர்
நிலமதை அபகரித்து ஏப்பமிடுகின்றான்….!

பிடரியில் பின்தொடரும் மரணத்தை
மறந்து எலும்பிலா நாவை ருசித்து
சூழ் உரைத்து குடும்பங்களை குலைத்து
பிறர் கண்ணீரில் இன்புறுகின்றான்….!

மனிதனெனும் நிலையை மறந்து
மிருகமாய் உருமாறி கலகங்களுக்கு
விதை தூவி இன்புறும் ஜடங்களே
உயிர்கள் அனைத்தும் உவந்தோ
கசந்தோ மரணமதை சுவைத்தே
மடிய வேண்டும் என்பதை நினைவில் கொள்…!

- வரலாற்றுச் சிறுகதைப் போட்டி – 2022 -
புல்மோட்டை கவி நவீத்
புல்மோட்டை கவி நவீத்https://minkirukkal.com/author/muhammathunaveeth/
திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை எனும் அழகிய கிராமத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன் எழுத்துக்களின் மேல் உள்ள ஆர்வத்தினால் கவரப்பட்டு பல்வேறு விதமான ஆக்கங்கள் எழுத ஆரம்பித்தேன் ஈரம் காயாத எழுத்துக்கள் எனும் புத்தகம் தற்போது எழுதி வருகின்றேன் சில நாட்களில் வெளியிடப்படும். இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தில் நீருயிரின கைத்தொழில் நீர்வள முகாமைத்துவம் முதலாவது ஆண்டின் கல்வி கற்கின்றேன்

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -