இருளின் பிம்பம்…!!!!

கவிதை

- Advertisement -

இரவின்
மடியில் தலை
வைத்து
படுத்துக்கொண்டு
அழுகிறது காலம்,

கடிகாரத்தின்
முட்களெல்லாம்
காலத்தின்
கழுத்தை அறுத்து
கொலை
செய்ய முற்பட்டு
கொண்டிருந்தது
நிகழ்காலத்தின்
முகத்திரை கிழியும்படி ,

மின்மினி
பூச்சிகளிடம்
வெளிச்சத்தை
கடன்
கேட்டு நிற்கின்றன
பகலில் தோன்றும் சூரியன்,

மறைய
போகிற சூரியனிடம்
கை கூப்பி
வணங்கி உபசரித்து
வழியனுப்பி வைக்கிறது
இரவின்
தொடக்க நேரம்,

மரங்கள்
பேசுவதை
மேகத்தின்
இருட்டில்
மறைந்திருந்து
பார்த்து
அழுது கொண்டிருந்தது வானம்,

பட்டியில்
அகப்பட்ட
ஆட்டுக்குட்டியின்
இதயத்திலிருந்து
முடிகளாக
உதிர்ந்து கொண்டிருந்தது அம்மாவுக்காக
ஏங்கிய
நாட்களின் நேரத்தை,

காலத்தை
கடிகாரத்தில்
பூட்டி வைத்துவிட்டு
சுவரோடு
சுவராக
காது வைத்து
கேட்டுக்கொண்டிருக்கிறது
காலம்
“டிக் டிக் “
சத்தத்தோடு
பேசுகிறது எதிர்காலம் ,

கிராமத்து கவிஞன்
கிராமத்து கவிஞன்https://minkirukkal.com/author/Sakthisamathmurthy/
கவிதை வாசிப்பது பாடல் பாடுவது ,பறை இசைப்பது, உழைக்கும் மக்களின் உணர்வுகளை கவிதையாக எழுதுவது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -