Myindia.sg கவிதைப்போட்டி 2021

ஆறுதல் பரிசு

வயிற்றுக்கு சோறிடல் வேண்டும்

- Advertisement -

“வயிற்றுக்கு சோறிடல் வேண்டும்..
சாபமும் வரமும் சேர்ந்தே கல்லாக்கியதால்
எந்தக் காலடிக்கும் உயிர்ப்பதில்லை:
ஒன்றுமில்லாத ஒன்றின் பசி
பேரண்டமானதால்
தீராப்பசியாகி திசையெங்கும் அலைகிறது
அட்சய பாத்திரங்கள்
பண்டமாற்று முறைக்கு பணிக்கப்பட்டுவிட்டது
ஒன்றுதிரண்ட கோரப்பசி
கொக்கை மட்டும் விட்டுவிடுமா
தரணிக்கே உணவில்லாத போதும்
கலன்கள் காக்கப்படும்
அரண்கள் சிதைக்கப்படும் இங்கே
வயிற்றுக்குச் சோறிடவே
கடவுளிடமிருந்து விதைகள்
கையாடப்பட்டன:
புலம்பெயர்ந்த வாழ்வும்
நதிநோக்கி நகர்ந்தது..

- வரலாற்றுச் சிறுகதைப் போட்டி – 2022 -
த அழகுராஜன்
த அழகுராஜன்https://minkirukkal.com/author/alagurajan/
எனது பெயர் த. அழகுராஜன். மதுரை மாவட்டத்தை சேர்ந்த கைலம்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்தவன். இளங்கலை பட்டம் (விலங்கியல் துறை) பெற்று, கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுமானத் துறையில் பணிபுரிகிறேன். கடைநிலை ஊழியனாய் பணியை ஆரம்பித்து இன்று வேலையிட பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். கல்லூரி காலங்களிலிருந்து கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன். இயக்குனர் சீனு ராமசாமி மற்றும் தாயுமானவன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறேன். சிங்கப்பூரில் கவிமாலை மற்றும் தங்கமீன் கலை இலக்கிய வட்டத்தில் தொடர்ந்து கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

2 COMMENTS

  1. மகிழ்வும் நல்வாழ்த்துகளும் அண்ணா…. ??? இன்னும் பல தொடர்வெற்றிகள் தங்களின் பாதையெங்கும் காத்திருக்கின்றன… தொடர்ந்து இயங்கினால் அனைத்தும் வசமாகும் ???❤

    • நன்றி மா.. உங்கள் தொடரூக்கும் என்னை மிகச் சிறந்த கவிதைகளை நோக்கி நகர்த்துவது உணர்கிறேன்

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -