யமுனா
அவளைப்பற்றி யோசிப்பதில்லை
சுற்றியுள்ள எல்லோருமே
அவளுக்கு நல்லவர்கள்தான்
ஏதோ பேசநினைத்தவள்
ஏதொ எழுத நினைத்தவள்
யோசிக்கமாட்டாள்
பிடித்துப்போனவர்களுக்காக
பிரியங்களை நிரப்பத்தொடங்கிவிடுவாள்
அவளுடைய பயத்தில்
அவளுடைய கோபத்தில்
அவளுடைய மௌனத்தில்
போகிறபோக்கில் அன்பை வெளிப்படுத்துவாள்
வெறுமனே அவள் விசாரிப்பதில்லை
உணர்வறிவாள்
அயர்ச்சியுற்றவர்களுக்கு நம்பிக்கையளிக்கும்
தேநீர் கோப்பையை நிரப்பிவிடுவாள்
கணப்பொழுதில் மாறிவிடும் வாழ்க்கையில்
மெல்ல மெல்ல விருட்சமாக வளரும்
யமுனா தவிர்க்க இயலாது
அனைத்துமானவளாக
கால்தடம் பதித்து கடந்து செல்கிறாள்