அலைபேசியில் கைகளை
ஒரு பென்டுலம் போல
மேல ஏற்றி கீழே இறக்கி பேசிக்கொண்டு
தூரத்தில் வந்துகொண்டிருந்த அவளை
பார்த்துக்கொண்டிருந்தேன்
பதட்டமடைந்திருந்தாள்
அழுதிருக்கக்கூடும்
என்னைச் சேர்ந்தகுரல் தோய்ந்திருந்தது
இன்னும் சற்று நேரத்தில் அருகருகே சந்திப்போம்
அவளை கடந்துபோகப்போகிறேன்
கண்ணீரைத் துடைத்துவிட்டதுபோல
ஆறுதலுக்கான சொற்களா
மன்னிக்கூடிய சொற்களா
அவளிடமிருந்து ஒவ்வொன்றாக என்னை வந்தடைந்தது
ஒவ்வொரு சொற்களுக்கும் ஒரு வர்ணம் என்று
மனதில் பல வர்ணங்களை பூசிக்கொண்டேன்
அவளைப் பார்ப்பதற்கான துரித நடையை
மந்தப்படுத்தியிருந்தேன்
இப்போதைக்கு தோய்ந்த குரல் சற்று என்னை ஆற்றுப்படுத்தியிருந்தது
கடந்துபோகிறாள் யமுனா
யமுனா வீடு – 31
தொடர் கவிதை