யமுனாவீடு -89

தொடர் கவிதை

- Advertisement -

ஒரு கல்லை எடுத்து குளத்தில் எறிந்து
அவனிடம் நீ விளையாடுகிறாய்
எழுந்து வரும் அலையாக நீ நினைக்கலாம்
அவன் மூழ்கிய கல்லாவும் இருக்கலாம்

பழகுதலில் நம்பிக்கையை
இருவருமே கொடுத்திருக்க
பொய்யாவும் இருந்திருக்கிறாய்
உண்மையாகவும் இருந்திருக்கிறான்
அவனுக்குத் தெரியாதது எல்லாம்
உனக்குத் தெரிந்திருக்கிறது

உனக்காகவே காத்திருந்த நேரத்திலெல்லாம்
அவன் என்னவாக இருந்திருப்பான்
பைத்தியமாக யோசித்திருப்பாயா நீ
யோசிக்காமல் இருப்பதே பைத்தியம்

உன் வேண்டுதலை மட்டுமே நீ அறிவாய்
உன்னோடு பயணிப்பதில்
அவனிடம் உனக்கான வேண்டுதல் இருக்கிறது
நேசம் பீறிட்டெழும்போதேல்லாம்
மௌனம் கலைக்கச்செய்கிறாய்

ஆறுதலாய் அருகிலிருந்து
நிதானமாக நேசிப்பவனிடம்
ஒவ்வொரு இறகாகப் பிடுங்க
அவன் விடாது சிரித்துக்கொண்டிருக்க
இருவருக்குமான பேரன்பில்
யாரவது ஒருவர் தோற்றுப்போகலாம்

நேசங்களைச் சொல்லிக்கொண்டே
இருந்தவனை
பைத்தியமாவதிலிருந்து
நீ விடுவிக்கிறாயா யமுனா ?
இல்லை
பைத்தியமாவதை புரியவைக்கிறாயா
யமுனா?

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -