யமுனாவீடு -73

- Advertisement -

அறம் என்பது
அங்கே தொலைவாக என்னவோதெரிகிறதா
ஒரு கடல்
ஒரு மலை
ஒற்றையாளாய் நான்

மது அருந்திய ஒருநாளில்
நீங்கள் கேட்டுப்பாருங்கள்
துன்பம் அவர்களுக்குத்தான்
என்று கடந்துவிடுவார்கள்

திரும்பத் திரும்ப
அவர்கள் அப்படித்தானிருப்பார்கள்
வேறொன்றும்மில்லை
பொறுத்தருளத்தெரியாதவர்கள்

உச்சிமலையேறி
மேகம் தொடத்தெரியாதவர்களிடம்
நீ கையேந்த வேண்டாம்
எல்லோருக்குமே இங்கு பலபாத்திரம்

ஒன்றுடன் ஒன்றைத் தொடர்புபடுத்தினால்
நீ துரத்தப்படுவாய்
இங்கெல்லாமே நீதான்

உன்னை மனப்பிறழ்வாக்கிடும்
இந்த இரவை நம்பாதே
குப்பைத்தாளாய்ப் பறக்கவிடப்படுவாய்

நீலம் பார்த்த
வேண்டுதலோடு
கைகளைப் பற்றி
முத்தமிட்டு
யமுனாவை இறுக அணைத்துக்கொள்பனாகவே
இரு

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -