தானே பேசுபவர்கள்

கவிதை

- Advertisement -

நேற்று மாலை பார்த்தேன்
காவி உடையணிந்த ஒருவர்
தானே பேசியபடி செல்வதை
பலர் கவனிப்பதை
அவர் கவனிக்கவில்லை
வார இறுதியில்
மஞ்சள் புடவை அணிந்து
வயதான அம்மா
பேசிக் கொண்டிருந்தார்
உன்மத்தமாக
தாங்க முடியாதோர்
காதடைத்துக்கொண்டனர்
ஒரு கணம்
பூக்காரியிடமும்
மறுகணம்
ஆட்டோ ஓட்டுனரிடமும்
கூர்ந்து கவனித்தால்
யாரோடும் இல்லை
தனக்குத்தானே
வார்த்தைகள் பொங்கி
வழிந்தோடும் கடைவீதி
யாருடன் கோபமோ
எவருக்கும் தெரியாது
நாக்கும் வார்த்தைகளும்
உலராதா இவர்களுக்கு
பேசவேண்டிய இடத்தில்
மௌனம் காத்தனரோ
பேசத் தொடங்கியவுடன்
நிறுத்தத் தெரியலையோ
ஆனாலும்
ஏதோ சொல்ல வருகிறார்கள்
நமக்குத்தான்
காதில் விழவில்லை
ஒன்று மட்டும் நிச்சயம்
இனியொரு முறை
நம்மிடம் அவர்கள்
பேசப் போவதில்லை

கண்ணன்
கண்ணன்https://minkirukkal.com/author/vkannan/
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். வேலை பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில். முதல் கவிதை நவீன விருட்சத்தில் 30வருடத்திற்கு முன்பு. செந்தூரம் இதழில் "பூனை புராணம்" கவிதை, தாய் மின்னிதழில் "பந்தி விசாரிப்பு" கவிதை வெளியாகி உள்ளது. இவருக்கு வாசிப்பது, இசை கேட்பது, கிரிக்கெட் பார்ப்பது, நல்ல ஓவியங்களை ரசிக்க, பயணம் செய்ய மிகவும் பிடிக்கும்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -