Myindia.sg கவிதைப்போட்டி 2021

இரண்டாம் பரிசு

- Advertisement -

பொங்கட்டும் புதுவாழ்வு

அடிப்பிடிக்காத மனதினை
நிரந்தரமாக வைத்துக்கொள்ளதான்
இடையிடையே வந்துபோகின்றன
தொன்மத்தின் நீட்சியாக விழாக்கள்.
ஆவியாகிக் கொண்டிருக்கும்
வாலிபத்தின் கொதிநிலையில்
புதிய தானியத்தோடு கலந்து உழல்கின்றது
ஒரு இல்லறத்தின் உலை.
நெல்லாய் பிறந்தவள் அரிசியாய் சமைந்து
பதமான உணவாகிறாள்
பசியைப் போக்கும் தாயாகிறாள்
மூடிவைக்கப்பட்டிருக்கும் வெறுமையை
நிலைகவிழச் செய்துவிட்டு
பொங்கி நிறைகின்றது பெருமகிழ்ச்சி
நீரில் திளைத்த பருக்கைகளை
நிறமாற்றிச் சுவையேற்றி
மணக்கச் செய்கின்றன மழலை வெல்லங்கள்.
இன்பக் குமிழிகள்
உருவில் பெருக..உடைந்து வழிய..
சங்கே முழங்கு.. சங்கே முழங்கு…

யாழிசை மணிவண்ணன்
யாழிசை மணிவண்ணன்https://minkirukkal.com/author/thamubose/
கடந்த பத்து ஆண்டுகளாக சிங்கையில் பணிபுரிந்து வருகிறார். சிங்கப்பூரின் தங்கமீன், கவிமாலை, வாசகர் வட்டம் போன்ற அமைப்புகளிலும், தமிழ் முரசு, சிராங்கூன் டைம்ஸ், போன்ற இதழ்களிலும் கவிதைகள் எழுதியிருக்கிறார். மேலும் தேக்கா எக்ஸ்பிரஸ் மற்றும் உயிர்மை போன்ற மின்னிதழ்களில் சில நூல் விமர்சனக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். நூல்கள்: 1.தேவதைகள் தூவும் மழை 2. கூடுதலாய் ஒரு நுழைவுச்சீட்டு 3. பஞ்சுமிட்டாய் பூக்கும் மரம்.

3 COMMENTS

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -