யாருக்காக நிற்கிறாய்?

கவிதை

- Advertisement -

இரவு ஆரம்பித்தபோது 

மதிலில் நிற்க ஆரம்பித்தாய்

யாரைக் காண?

அதிகாலை மூன்று மணியளவில்

உன் அழகை படம் பிடித்தேன்

அப்போதும் நீயென்னை திரும்பி பார்க்கவில்லை

உன் பார்வைக்காக நான் விழித்திருக்க

உன் நிழல் கூட என் மீது விழவில்லை என்பதால் 

அந்த ஏக்கத்தில் நிழற்படம் எடுத்தேன்

இன்றும் அதிகாலை உனைக் காண்பேன்

அப்போதாவது சொல்  யாருக்காக நிற்கிறாய் என்று?

அழகிய புறாவே !!

சுதா மாதவன்
சுதா மாதவன்https://minkirukkal.com/author/sudhavaish2018/
நான் தனியார் நிறுவனத்தில் முப்பது ஆண்டுகள் பணி புரிந்து ஓய்வு பெற்றுளேன். மனதின் புதையல் என்ற யூtube சேனல் நடத்தி வருகிறேன்.B. Com பட்டதாரி கவிதை எழுதுவது மிகவும் பிடித்த விஷயம்.. Pவல்லமை மினிதழ் படகவிதை போட்டிக்காக நிறைய கவிதைகள் எழுதியுளேன். எனது சேனளுக்கான பாடல்களை நானே எழுதி உள்ளேன்.

1 COMMENT

  1. மின்கிறுக்கல் குழுமத்திற்கு நன்றிகள் பல. கவிதை வெளிவந்ததில் மிக்க மகழ்ச்சி.
    அனைவர்க்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -