யமுனாவீடு -64

தொடர் கவிதை

- Advertisement -

ஒரு உதவியாகக் கேட்கிறேன்
அந்த அறைக்கதவைச் சாத்திவிட்டுப்போங்கள்

ஏன் இப்படி நடக்கிறது
இந்த நேரத்தில்
வலியோடு ஓட வேண்டும்
ஆரம்பித்த இடத்தில் நிற்கிறேன்

எல்லாமே வணிகமாகிவிட்டது
வேறு ஏதாவது செய்யவேண்டும்
யாருடையத் தயவைத் தேடுவேன்

அருகிலிருப்பர்களின் சிந்தனையில்
ஒரு சிகரெட்டைப்
புகைப்பவனாகத்தானே இருந்திருப்பேன்

மாய மனதின்
வெவ்வேறு துண்டுகளாக இருக்கிறேன்
களிப்பில் நடனமாடி
ஒரு முத்தமிடவேண்டும்

யமுனாவின் சாயலில்
எல்லோரும் கடந்து போகிறார்கள்
அவளின் வாசனை
என்னை அழைத்துச்செல்கிறது

இங்கு எதுவும் பொய்யாகவில்லை
உறங்கி எழுந்துவிடுறேன்
வரும் கனவில்
சற்றே தலைகோதிவிடு யமுனா

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -