யமுனா வீடு – 72

தொடர் கவிதை

- Advertisement -

இதே
இதே
இதைத்தான் சொல்கிறேன்
ஒரு கனவோடு இருப்பவர்கள்
துள்ளிக்குதிக்கத்தான் செய்கிறார்கள்

நீ
ஒரு பொய்யைச்சொல்லலாம்
அவள்
ஒரு உண்மையைச்சொல்லாம்
அவர்கள்
உரக்கச் சிரித்துக்கொண்டிருப்பார்கள்

தோற்றுப்போகிறவர்கள்தான்
பிறகொருநாளில்
வெற்றிபெறுகிறார்கள்
போகிற வழியெங்கும்
நீ எழுதிக்கொண்டே இரு

அதிகாலையில் நினைவுகொண்டு
யார்மடியைத்தேடி
நீ வாகனத்தை செலுத்தினாயோ
நினைத்தெல்லாம் பார்க்காதே இப்போது

பொய்யானவர்கள்
சாதுர்யமானவர்கள்
மன்னிப்பவர்களென்று
இங்கு யாவருமில்லை

யமுனாதானே
விசாரிக்காதே
ரகசிய அறைக்குள் பதிங்கியிருக்குமவள்
பிசாசாக வருவாள்

போ கடல்பார்த்து
மணலைவாரித்தூற்று
பெரும் அலையொன்று இழுத்துச்செல்ல
உனக்கு நீயேதான்
மன்னிப்பை அருளவேண்டும்

ஊர்பார்த்து சிரிக்கட்டும்
நீ நடனமாடிக்கொண்டே
கடந்துபோ.

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -