கனவுகளில் தொலைந்து போகிறவன்
மௌனம் கலைத்து
ஆறிப்போன தேநீரை அருந்துகிறான்
அப்படியே திரும்பிப்பார்க்கிறான்
உயரமான கட்டிடங்களைப்
பார்க்கும் போதெல்லாம்
ஏறிப்பார்கயக்கத்தோன்றும் ஒருவனுக்குக்
குதித்துப்பார்க்கத் தோன்றுவதில்லை
உயரம் ஏறியவன்
ஆகயத்தைப் பார்க்கிறான்
நீல வானம் ஒரு கடல்
உயரனமான கட்டிடத்திலிருந்து
நீல வானம் பார்த்து
கனவில் குதித்துப்பார்க்கிறான்
ஒரு பேரலையில்
எழுந்து வருகிறான்
வெண் சங்கைப் பற்றிக்கொண்டு
கடல் பார்த்து நின்றவனை
நீ பார்க்கிறாய் யமுனா
கலங்கி நின்றவனின் தடம்பற்றுகிறாய்
இறங்கிச்செல்லும் அலைகளைப்போல நீ வந்து
கைகளைப் பற்றுகிறாய்
பற்றுதலில் நீ தந்தஅழுத்தத்தில்
கரைந்துவிடுகிறான் யமுனா
ஒரு பேரலை எழுந்து வருகிறது