மழைப்பொழுதும் சிகரெட் துண்டுகளும்
புகைத்துப்போட்ட சிகரெட் துண்டுகள்
ஓர் அழையாத மழைப்பொழுதில்
பொசுங்கி பொசுங்கி
எழுப்பும் சத்தத்தை
இரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தீத்துகல்கள் இருள்வது
ஒரு மனவேட்கை
தீர்ந்து முடிவதாக
தோன்றும் கணங்களில்
தம்மைத் தாமே
ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள்.
இன்னும் பல
நிறைவேறாத வேண்டுதல்களுக்கும்
கைக்கூடாத சந்திப்புகளுக்கும்
தீர்ந்திடாத துயரங்களுக்கும்
ஒரு மழைப்பொழுதும்
ஒரு பெட்டி சிகரெட் கட்டுகளும்
வேண்டுமெனத் தீர்மானித்துக் கொள்வார்கள்.
-கே.பாலமுருகன்
தீத்துகல்கள் தீரும்வரை மனத்தில் தோன்றும் சிக்கல்களைக் தற்காலிகமாக கட்டவிழ்த்து விடுகிறது சிகரெட் துண்டுகள்.அந்த தற்காலிக அமைதி,தீர்வு அழிவுக்கான நிரந்தரத்தை உறுதிப்படுத்துகிறது.இருப்பினும்,தற்காலிக மகிழ்ச்சியைத் தான் மனம் நாடுகிறது.