கார்கால சிறுகதைப்போட்டி 2021

சிறுகதைப் போட்டி

- Advertisement -

அன்பார்ந்த மின்கிறுக்கல் எழுத்தாளர்களே/வாசகர்களே,

கடுமையான வெயில் காலம் நேற்றுடன் நிறைவடைந்து இன்று முதல் கார் காலம் தொடங்குகிறது. சிறுவயது முதலே மழைக்காலம் என்றால் நம் மனதில் ஒரு தனி குதூகலம் தானே! மழையால் பள்ளிக்கு விடுமுறை என்ற அறிவிப்பு முதல் பல்வேறு இனிமையான நினைவுகள் கார்(மழை)காலத்துடன் கலந்துள்ளது. வாழ்வின் ஒவ்வொரு பருவத்திற்கும் மழை பல விதமான அனுபவங்களை கொடுக்கிறது. அப்படிப்பட்ட உங்கள் நினைவுகளை புனைவுக் கதையாக உருமாற்றி editor@minkirukkal.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். வெற்றிபெறும் கதைகளுக்கு ரொக்கப் பரிசுகள் காத்திருக்கின்றன.

போட்டி விதிமுறைகள்:

  • நீங்கள் அனுப்பும் சிறுகதை ஏதேனும் ஒரு விதத்தில் கார்காலத்துடன் சம்பந்தப்பட்டு இருக்கவேண்டும்.
  • கதை 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் unicode தமிழ் வடிவத்தில் .docx, .rtf, .txt கோப்புகளில் ஏதேனும் ஒரு வகையில் மின்னஞ்சலில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • மின்னஞ்சல் தலைப்பு “கார்கால கதைப்போட்டி 2021” என்று இருக்க வேண்டும்.
  • நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 2000, இரண்டாம் பரிசாக ரூபாய் 1000, மூன்றாம் பரிசாக ரூபாய் 500 (2 போட்டியாளர்களுக்கு) மற்றும் ஆறுதல் பரிசாக பிரசுரமாகும் அனைத்து சிறுகதைகளும் ரூபாய் 200 வழங்கப்படும்.
  • ஆசிரியர் மற்றும் நடுவர் குழுவின் முடிவே இறுதியானது.
  • போட்டியில் பங்கேற்க சிறுகதையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 31 ஜூலை 2021

கீழ்க்கண்ட உறுதிமொழியை மின்னஞ்சலுடன் இணைப்பது அவசியம்.

“இக்கதையை போட்டி முடிவு வெளியாகும் வரை வேறு எந்த இதழுக்கோ அல்லது அச்சிற்கோ அல்லது டிஜிட்டல் வடிவிலோ அனுப்ப மாட்டேன்.

இது ஏற்கனவே அச்சிலோ, மின்னிதழிலோ, கிண்டில் அல்லது ஆடியோ புக் என எவ்வித வடிவத்திலும் வெளிவராத படைப்பு என்றும் உறுதிளிக்கிறேன்.

மேலும் இந்தப் படைப்பானது எனது சொந்தக் கற்பனையில் உருவானது என்றும் அது எவ்வித மொழிபெயர்ப்போ அல்லது தழுவலோ அல்ல என்கிற உறுதிமொழியையும் அளிக்கிறேன்.”

வெற்றி பெறும் போட்டியாளர்களின் கதை அனைத்தும் எழுத்தாளரின் புகைப்படம் மற்றும் சிறு குறிப்புடன் மின் கிறுக்கல் தளத்தில் வெளியிடப்படும். சிறுகதையை அனுப்பும் போட்டியாளர்கள் அனைவரும் மின்னஞ்சலில் சிறுகதையுடன் தங்களுடைய புகைப்படம் மற்றும் சிறு குறிப்பையும் சேர்த்து அனுப்பும் படி கேட்டுக்கொள்கிறோம்.


ஆசிரியர், மின்கிறுக்கல்
மின்னஞ்சல் : editor@minkirukkal.com
www.minkirukkal.com

- இரண்டாம் ஆண்டு – இரண்டு போட்டிகள் -
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -
0
Would love your thoughts, please comment.x
()
x