காதல் கிறுக்கன்

கவிதை

- Advertisement -

மேகங்கள் காகிதமாகும்
காற்று கவிதையாகும்.
பூக்கள் பஞ்சு மெத்தையாகும்
நீல வானத்தை பிழிந்து மையாக்கி
கவி வடிக்க தோன்றும்.
தென்றலோடு பேசிடுவாய்
நிலவை வர்ணிக்க தொடங்குவாய்
நண்பகல் தான் உனக்கு சூரிய உதயம்
பார்ப்பது அனைத்தும் அழகாய் தென்படும்
தனிமையில் சிரித்திடுவாய்
கனவு உலகில் மிதந்திடுவாய்
கற்பனையிலே வாழ ஆரம்பித்து விடுவாய்
செல்லாத இடமெல்லாம் சென்று வருவாய்
உன் காதலியுடன் கைகோர்த்து
கல்லூரி செல்லாமலே பட்டம் பெற்றிடுவாய்
கிறுக்கன் என்ற பட்டம்

உன்னை சுற்றி ஒளி வட்டம்
தோன்றும்
உன் காதலி மட்டும் உன் நினைவில் இருப்பாள்
வானம் அழகாகும் நட்சத்திரம் துணையாகும்
இரவு நண்பணாகும்
பகல் எதிரியாகும்
அடிக்கடி நாட்களை எண்ணுவாய்
காதலி முகம் காண ஏங்குவாய்
அவள் பெயர் உனக்கு மந்திரமாகும்
அவள் முகம் உனக்கு
தேவதையாகும்

மொத்தத்தில் அவளை காண
நாள் தோறும் நீ காதல் கிறுக்கன்
ஆகிவிடுவாய்…

Previous article
Next article
கவிஞர். ர. ரமேஷ்
கவிஞர். ர. ரமேஷ்https://minkirukkal.com/author/rramesh/
நான் கவிஞர் மற்றும் எழுத்தளார். தமிழ் ஆர்வலர் நிறைய புத்ததங்களுக்கு துணை துணை ஆசிரியராக கவிதைகள் எழுதியுள்ளேன்.. கவிதைகளுக்கு பரிசும் பெற்றுள்ளேன். மற்றும் நான் எழுதிய ப்ளீஸ் ஓபன் பண்ணுங்க என்ற சிறுகதை புத்தகம் இணையதளத்தில் வெளியாகியும் உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட விருதுச் சான்றிதழ்கள். மற்றும் மேடை விருதுகள் பெற்றுள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -