யமுனா வீடு

தொடர் கவிதைகள் - 4

- Advertisement -

கடந்த சில நாள்களாக
யமுனா
நலங்குன்றி இருக்கிறாள்
யாருடனும் பேசுவதில்லை
பழச்சாறை மட்டும் குடித்துக்கொண்டிருந்தவள்
தற்போது தண்ணீர் போதுமென்கிறாள்
இடையிடையே கண்விழித்துப்
பழங்கதைகளைப் பேசுகிறாள்
சற்று நேரத்திற்குப் பிறகு
நாளை நடப்பதைக் குறிப்பெடுக்கச் சொல்கிறாள்

இப்போதைக்கு
யமுனா
ஏற்றிவைத்த மெழுகுவத்தியாக இருக்கிறாள்
இரவும் பகலும் ஒன்றாகிப்போகும் நாளொன்றில்
யமுனா
முன்னைப்போல பறந்து செல்லலாம்

அவளின் சிறகசைப்பில்
உதிர்ந்து விழும் இறகொன்றைப்
பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளும்
காலத்தில் நானிருக்கிறேன்.

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -