என் வானம் அமாவாசை இருளால்
பரவிக் கிடக்கும்போது
ஒரேயொரு முத்தத்தால்
எண்ணிலடங்கா
மின்மினிப் பூச்சிகளைப் பறக்கவிடுறாள்
என் சின்னக் கண்மணி!
கவிதைக்காக மெனக்கிட்டு ஏணியிலேறி
பரணில் வார்தைகள் தேட எத்தனிதேன்.
வண்ணக் கலவையினுள் பாதம் பதித்து
தரையில் ஓடி விளையாட விளித்தாள்
என் சின்னக் கண்மணி.
மூச்சிரைக்கத் துரத்தியதில்
அயர்ந்த பிஞ்சுப் பாதங்கள்
இளைப்பாறின ஓவியமாய்.
இப்போது தரையில் கிடப்பவை
வார்த்தைகளாகி
தத்தித்தத்தி வந்து
காகிதத்திலேறி
கவிதையாய் மிளிர்கிறது!