உயிரொழுகிய தருணம்

கவிதை

- Advertisement -

இனியொரு முறை
வாராது
உயிரொழுகிய தருணமொன்றை
உடனிருந்து பார்த்தது
‘வீட்டுக்கு எடுத்துக்கிட்டுப்
போய்டுங்க’
மருத்துவர் கைவிரிக்க
தாத்தாவை அழைத்து வந்து
கட்டிலில் படுக்க வைத்தோம்
எடுத்த விடுப்பு
முடிந்து போக
முகம் பார்த்துக்
கிளம்புகையில்
களுக் எனவே
தூக்கிப்போட
தலைசரிய
உடலடங்க
காற்றடைத்தப் பையிலிருந்து
பறவையொன்று மேலேரும்
யாருமறியா கூட்டுக்கு

- கட்டுரைப்போட்டி முடிவுகள் -
கண்ணன்https://minkirukkal.com/author/vkannan/
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். வேலை பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில். முதல் கவிதை நவீன விருட்சத்தில் 30வருடத்திற்கு முன்பு. செந்தூரம் இதழில் "பூனை புராணம்" கவிதை, தாய் மின்னிதழில் "பந்தி விசாரிப்பு" கவிதை வெளியாகி உள்ளது. இவருக்கு வாசிப்பது, இசை கேட்பது, கிரிக்கெட் பார்ப்பது, நல்ல ஓவியங்களை ரசிக்க, பயணம் செய்ய மிகவும் பிடிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -