வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்
ஊரடங்குன்னு சொன்னீங்க…
என் எட்டு சாண் உடம்புல
ஏழு சாண்
நான் சொன்னபடி
கேக்குதுங்க…
ஒரு சாண் வயிறு மட்டும்
அடம்பண்ணி
தரையில விழுந்து
அழுகுதுங்க…
பாழாப்போன
வயித்த நனைக்க
வாங்கும் தண்ணிக்கே
வக்கத்து கெடக்கையில
பாலுக்கு அழும் பிள்ளைக்கு
காசுக்கு எங்க நாங்க
போவோமுங்க…
வீட்டுல இருக்கும்
புழுத்த அரிசிய
பழுத்த இலைங்க நாங்க
அவிச்சு தின்னாலும்
குருத்து இலைகளெல்லாம்
கொல பட்டினியா
கெடக்குதுங்க…
நோய் வந்து பாய் விரிச்சா
பசி வந்து கொல்லுதுங்க…
வாழ்வதா சாவதான்னு
வழக்காட வரலைங்க…
சோத்துக்கு ஒரு வழி சொல்லுங்க…
இல்ல விசத்தையாவது அனுப்பி வையுங்க…
நல்வாழ்த்துகள் ???
நல்வாழ்த்துகள் ?