Myindia.sg கவிதைப்போட்டி 2021

ஆறுதல் பரிசு

- Advertisement -

வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்

ஊரடங்குன்னு சொன்னீங்க…
என் எட்டு சாண் உடம்புல
ஏழு சாண்
நான் சொன்னபடி
கேக்குதுங்க…

ஒரு சாண் வயிறு மட்டும்
அடம்பண்ணி
தரையில விழுந்து
அழுகுதுங்க…

பாழாப்போன
வயித்த நனைக்க
வாங்கும் தண்ணிக்கே
வக்கத்து கெடக்கையில
பாலுக்கு அழும் பிள்ளைக்கு
காசுக்கு எங்க நாங்க
போவோமுங்க…

வீட்டுல இருக்கும்
புழுத்த அரிசிய
பழுத்த இலைங்க நாங்க
அவிச்சு தின்னாலும்
குருத்து இலைகளெல்லாம்
கொல பட்டினியா
கெடக்குதுங்க…

நோய் வந்து பாய் விரிச்சா
பசி வந்து கொல்லுதுங்க…

வாழ்வதா சாவதான்னு
வழக்காட வரலைங்க…
சோத்துக்கு ஒரு வழி சொல்லுங்க…
இல்ல விசத்தையாவது அனுப்பி வையுங்க…

பிஞ்ஞகன்
பிஞ்ஞகன்https://minkirukkal.com/author/shanthamoorthi/
சிவகங்கை மாவட்டம், கண்ணமங்கலம் எனும் குக்கிராமத்தில் பாண்டி மீனாட்சி எனும் ஏழை விவசாய தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த நான், என் கிராமத்திலே என்னுடைய பள்ளி கல்வியை பயின்றேன், அங்கு கல்லூரி பயில இயலாத நிலையில், சென்னைக்குச் சென்று சில ஆண்டுகள் பல அனுபவக் கல்வியும் பயின்றேன். பிறகு கல்லூரியில் சேர்ந்து தேர்ச்சியும் பெற்றேன். தற்பொழுது மென்பொருள் ஆய்வாளராக பணியாற்றுகின்றேன். பள்ளிக்காலம் முதலே பிஞ்ஞகன் என்னும் பெயரில் கவிதைகளை இயற்றி வருகின்றேன். என் கிராமத்தின் மீதும் தமிழ் அன்னையின் மீதும் உள்ள தீராத காதலால் என் கிராமத்து வாசனையை தமிழில் சுவாசித்துக்கொண்டிருக்கின்றேன்.

2 COMMENTS

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -