தூக்கமிழந்த இரவுகளில்
பரிச்சியமானவர்கள்
யாரவது இருக்கிறார்களா
தேடத்தொடங்கிவிடுகிறேன்
எதுபற்றியும் சிந்தனையில்லாமல்
நகரத்தின் வெளிச்சத்தில்
பாதங்கள் நடக்கத்தொடங்குவதை
நிறுத்தமுடியவில்லை
விடியக்காத்திருக்கும்
வானம் பார்த்தவனாக
ஆறாத காயத்தோடு
பொறுமையற்று
திரும்பவருகிறேன்
எனக்கு நானே பேசிக்கொண்டு
எனக்கு நானே அழுதுகொண்டு
எனக்கு நானே சிரித்துக்கொண்டு
பிணியுற்றவனின்
இந்தப்பொழுதில் – யமுனா
பூரணத்துவமாக நீ இருப்பதாலே
பாதுகாப்புடன்
பெருவிரைவுச்சாலையில்
விரைந்துசெல்கிறேன்