நாகேந்திரன் பங்களா – 1

- Advertisement -

ஆமா,அதுவொரு
வெள்ளிக்கிழமை இரவு,
அன்னெக்குதான் என் வாழ்க்கையில
மறக்கமுடியாத அந்த
சம்பவம் நடந்துச்சு.

திகில் கூட்டுறதுக்காக இரவுன்னு சொல்றேன்னு நினைக்காதீங்க, அதற்கு காரணம் இருக்கு.
பொதுவா நமக்கு நல்லா பழக்கப்பட்ட பக்கத்து வீடுகூட மழை காலங்களின் நடுசாமத்தில ஒத்த விளக்கோட பார்த்தா திகிலாக தானே இருக்கும்,அதுவே அப்படின்னா.

அன்னைக்கு நான்…..,
இல்லயில்ல நாங்க போன வீடு எங்களுக்கு துளியும் சம்மந்தம் இல்லாதா முன்பின் பழக்கமில்லாத ஊருக்கு
வெளில  இருந்த ஒத்த வீடு.

நாங்கன்னா…? நானு,அஜய்,வினோத் மூணுபேரும். சென்னைக்கு வேலை தேடிவந்து நாலு மாசம் ஆச்சே இன்னும் ஒன்னும் ஆனபாடு இல்லையேன்னு. காலையில சோகத்த விரட்ட சோமபானத்த உள்ள விட்டுட்டு பொலம்பத் துவங்கிருந்தோம்.

உண்மையாவே கவலையானா.?
சரியா தெரியல.
குடிக்க காரணம் வேணும்ல.

சரி கதைக்கு வாரேன்.
மூணுபேரும் கடைசிக்காட்சி படத்துக்கு போகலாம்னு ,
நாங்க வச்சிருந்த ராஜாத்திய கூட்டிட்டு கிளம்பினோம்,
ஹெலோ…ராஜத்தினா RX-100 பைக் அதை எடுத்துட்டு கிளம்பினோம்.

போய்டு இருக்கப்போ வினோத் சொன்னான்.
“என்னாடா இது எப்ப பாரு குடிக்க வேண்டியது.அப்புறம் ஏதாவது மொக்க படத்தை பாத்துட்டு வந்து படுக்க வேண்டியது .ஒரே
ஃபோர் டா மச்சான்”.
‘வேற என்னடா பண்றது நமக்கு இருக்கிற ஒரே எண்டர்டைன்மெண்ட் அதானே’ ன்னு அவனுக்கு பதில் சொல்லிக்கிட்டே அஃக்ஷிலேட்டர ஒரு முறுக்கு முறுக்கினான்.அஜய்.

மச்சி…டென்ஷன் ஆகாத
ஒன்னு சொல்றேன். இப்போ டிக்கெட் எடுக்க வச்சிருக்க காச வச்சி பெட்ரோல் போட்டுக்கிட்டு அப்படியே நமக்கு தெரியாத ரூட்ல ஒரு ரௌண்டு போவோமா.
“ஐ வான கெட் சம்திங் நியூ திரில் எஸ்பிரியஸ்” மச்சி ன்னான் வினோத்.

டேய்….. அதெல்லாம் ஒன்னும் வேணாம் ,மழை வர மாதிரி இருக்கு போற வழில எங்கயாச்சும் மாடிக்கிட்டா என்ன பண்றது. நயிட் அவுட் ன்னு குடிச்சிட்டு போதையில வண்டி ஓட்டிக்கிட்டு அதும் ஹெல்மட் இல்ல, ட்ரிபில்ஸ் வேற இந்த நேரத்துல போலிஸ்கிட்ட மாட்டினா. அவ்ளோதான், உரிச்சிடுவானுங்க.
நீ விடுரா ராசாத்திய
கருமாரியம்மன் தியேட்டருக்கு அப்படின்னு இரண்டு பேருக்கும் நடுவுலயிருந்த நான்  சொன்னேன்.

போகவேணம் ன்னு சொன்னதுக்கு உண்மையான காரணம் அதில்ல. இயல்பாவே நான் கொஞ்சம் பயந்த சுபாவம் ,இந்த ராத்திரியில தெரியாத இடத்துக்கு போறது நல்லது இல்லன்னு மனசுக்கு பட்டுச்சு அதான் அப்படி சொன்னேன்.

     இவனுங்களுக்குதான் அது தெரியுமே, ஆரமிச்சிட்டானுங்க கலாய்க்க.சிரிச்சு சிரிச்சு போதையே கலஞ்சிடுச்சி அவனுங்களுக்கு. படத்துக்கு போற முன்னால லைட்டா போட்டு போவோமா ன்னு அஜய் கேட்க சரின்னு போனோம்.

திரும்ப அங்கேயும் சிரிக்க ஆரமிச்சி எனக்கு கோவம் வரவச்சி, எங்க வேணும்னா வங்கடா பாத்துக்கலாம்ன்னு என் வாயால சொல்லவச்சி, நாங்க நல்லா சிக்க போற பிரச்சனைக்கு என்ன வச்சே பிள்ளையார் சுழி போட வச்சிட்டானுங்க.

எவ்ளோ குடிச்சோம்,எப்போ கிளம்பினோம், எந்த ரூட்ல வந்தோம், எதும் நியாபகத்துல இல்ல. வண்டி பெட்ரோல் இல்லாம டேங்க் டிரை ஆகி கீழ விழுந்துருக்கோம் போல.

அதுனால பெரிய அடி இல்லனாலும் இது எந்த இடம்.? இங்க இருந்து ஊருக்குள்ள போக எவ்ளோ தூரம்.?எதுமே கணிக்க முடியாத இருட்டு.

அப்பகூட இடி சத்தமும், மின்னலும், மழை தூரலும் வராமல் இருந்திருந்தா.
இன்னும் எவ்வளவு நேரம் அங்யே படுத்திருந்துருப்போமோ.

“டேய் மச்சி எழுந்திரிடா செம்மையா இருட்டிருக்கு நல்லா மழை பிடிக்கிறதுக்கு முன்னால பக்கதுல எதும் ஒதுங்க இடம் கிடைக்குதான்னு பாப்போம்ன்னு அஜயை எழுப்பிட்டு இருந்தான். வினோத்.

நான் அப்படியே பேயரஞ்ச மாதிரி உக்காந்து இருக்கேன்.
ராசாத்திய நிமித்தி அங்க இருந்த மரத்தடில நிறுத்தி புட்டிட்டு அந்தசாவியை அஜய் பாக்கெட் ல வச்சிக்கிட்டான்.

” ஏன்டா இதெல்லாம் ஒரு கீ செய்யினா வேற மாத்தி தொல”ன்னான் வினோத்.

‘டேய் இது எங்க குலசாமி கோவில்ல வச்சி பூசபோட்ட தாயத்துடா. அது மட்டுமில்ல அம்மா  கொடுத்தது’ அதான் மாத்த மனசு வரல.இப்படி அஜய் பேசிட்டு இருக்கும்போதே பளிச்சுன்னு மின்னல்
ஒரு வெட்டு வெட்டி.

படப்படப்பட ..பட்டார்ன்னு….

(பயங்கர சத்தத்தோடு இடித்த இடி. எங்கயோ பக்கத்துல தான் விழுந்திருக்கும்ன்னு சுற்றி கண்கள் அச்சத்தில அலஞ்சப்போ…. அந்த வெளிச்சத்தில் தெரிஞ்சது அந்த வீடு.)

டேய்…. டேய்…… உனக்கு
மனசு வருதோ இல்லையோ. வீடு வந்துடுச்சிடா, ஊருக்குள்ள வந்துட்டோம் போல .
வாங்க சீக்கிரம் போவோம் மழைல நனைஞ்சிட்டா குளிர்லே செத்துருவேன்.

மின்னல் வெளிச்சத்துல பார்த்தப்போ கிட்ட இருந்த மாதிரி இருந்துச்சி .ஆனா, இவ்வளவு தூரம் நடந்துட்டோம். இன்னும்,அந்த வீடு கண்ணுல படவே இல்லையே டா….?

“ஒழுங்கா பாத்தியா அது வீடு தானா.”
வீடாவா?? அட போடா. எவ்வளவு பெரிய பங்களா போல இருந்துச்சி..
ஜெமின்கோட்டை படத்துல வர  மாதிரி
ஹா ஹா ஹா…….

திரிம்பவும் பளீச்ன்னு மின்னல். அப்போதான் தெரிஞ்சது
நாங்க வீட்டுக்குள்ள எப்போவோ வந்துட்டோம் ன்னு.

ஹெலோ …..சார்
யாராச்சும் இருக்கீங்களா.?
நான் கேட்டது ஒருதடவ தான். ஆனா,அது பத்து முறையா எதிரொலிச்சிச்சு..என்னடா யாருமே இல்லாத வீடு
போலல்ல இருக்கு.

ஏன் மச்சி.?அவன் அவன் சின்னதா ஒரு வீடு கட்டிக்கவே திண்டாடுறான்,இவனுங்க என்னான்னா இவ்வளவு பெரிய வீட்ட கட்டி சும்மா போட்டு வச்சிருக்கானுங்களே.

ஏன் இங்க கட்டினாங்க?
இப்போ என்  யாருமே இல்லன்னு தெரியலயே,?
டேய் நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கன் நீங்க பதிலே பேசாம வரிங்க.
டேய்……. டேய்……….. மச்சி………வினோத்துது……..
அஜய்……வி வி வினோனோ த்தஜெய்………டேய்ய்ய் …..
( எதிரொலி) டேய்………டேய்…… டேய்…..டேய்….. டேய்.
விளையாடாதீங்கடா..டா..டா..டா
பயம்மா இருக்கு க்கு..க்கு…க்கு……
எதிரொலி அந்த தூரத்து சுவரில் சென்று அடங்கும் முன்.

ட்ரிங்ட்ரிங்….. ட்ரிங்ட்ரிங்…..
ட்ரின்ட்ரிங்…..
ஃபோன் !? ஆமா, ஃபோன்
சத்தம்தான்.
யாருமே இல்லாதா வீடுன்னு நினைச்சிட்டோமே.
சார்….யாரவது இருக்கீங்களா? இங்க போன் அடிச்சிட்டே இருக்கு பாருங்க.
தட்டுத்தடுமாறி போன் இருந்த இடத்தை நோக்கி நடந்து ஒரு வழியா பக்கத்துல வந்துட்டேன்.

ரிசிவர்ல கைய வைக்கிறேன் இன்னோரு கையும் அது மேல இருக்கு….
போன் கட் ஆச்சி…
எனக்கு இதயமே நின்னுடும் போல படபடப்பு,
டேய் நாயே ஏண்டா இப்படி பன்றிங்க அஜய்…
வினோத் எங்கடா..?

“தெரில”
(கரகரத்த குரல்)

அஜய் இல்லையா.
சார் நீங்க யாரு .?
இது என்னயிடம்.?எந்த ஊரு? ஏன் இவ்வளவு
இருட்டாயிருக்கு.?

ஏன் வெளிச்சம் வேணுமா ..?ன்னு கேட்டுட்டு
ஹா………ஹா………..ஹா……….
ரொம்ப பயங்கரமண குரல்ல
குலை நடுங்கவைக்கிற
மாதிரி ஒரு சிரிப்பு.

டாஸ்ஸ்ஸ்……….

தீக்குச்சிய உரசி மெழுகுவர்த்தி ஏத்த, அப்படியே மெல்ல மெல்ல அந்த வெளிச்சம் பரவ அப்பாடா ன்னு மூச்சி விட தயாரா இருந்த சமயம்..

அம்ம்ம்மமமா…………………..ன்னுஒரு அலறல் சத்தம்.
அது வினோத்தொட குரல்தான்.
சேர்ந்த மாதிரி இந்த மெழுகுவர்த்திய ஏந்தி பிடிச்சிருக்க ஆளோட முகமும் தெரியுது பாதி முகம் ஏதோ நெருப்பில சிதஞ்ச மாதிரி அந்த சத்தமும் இந்த முகமும் சுத்தி இருட்டும் எப்படி இருந்து இருக்கும் யோசிச்சி பாருங்க.

அம்மாடியோவ் அவ்வளவுதான். எங்க இருந்துதான் அவ்வளவு வேர்வை வந்துச்சோ தெரியல சலசலசலன்னு ஊத்துது .

யயயயா……ரு நீங்க ?

கேட்ட அடுத்த வினாடி பட்டார்ன்னு ஒரு அடி விழுந்துச்சி என் மண்டைல. அலரிட்டு விழுந்தேன் இப்போ வேர்வையோட சேர்த்து
ரத்தமும் ஓடுது.

வினோத்… அஜய்….டேய் மச்சான் எங்கடா இருக்கீங்க என்ன இடம்டா இது….
நான்தான் சொன்னேல டா இப்போ பாரு எங்கேயோ வந்து வசமா மட்டிக்கிட்டோம்.

வினோத் ஒருபக்கம் ,முனகல் சத்தத்தொட இருமிக்கிட்டே சொல்றான், தெரிலயடா
ஆஆஆஆ……யாரு அடிக்கிறாங்க  எங்க இருந்து அடிக்கிறாங்கன்னே தெரிலய ஆஆஆ….அம்மா…..
அஜய் என்ன ஆனானே தெரிலடா.அப்போ அலறலோட யாரோ ஓடுற சத்தம் கேக்குது.

நல்லா வந்து மட்டிக்கிட்டோம் இது ரொம்ப வருசத்துக்கு முன்னால எறிஞ்சி போன குறவன் காலனி.
இந்த இடத்தை எடுத்துக்க
இங்க இருந்தவங்களை
உயிரோட வச்சி எறிச்சிட்டு அப்புறமா கட்டின நாகேந்திரன் பங்களா.
இறந்துபோன எல்லோரோட ஆத்மாக்களும் இங்கதான் அலஞ்சிட்டு இருக்றதா சொல்லி கேள்வி பட்டுருக்கேன்.
அதை உண்மையான்னு தெரிஞ்சிக்கதான் இங்க வர நினைச்சேன்…ஆனா அது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்போதான் புரியுதுன்னு வினோத் சொல்லி முடிக்க.

படார் படார் படப்படப்பட
இடி தலைல விழுற மாதிரி நெருக்கத்துல சத்தம்.

~தொடரும்…..

இந்தக்கதையின் இறுதிப் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

தமிழ் வாணன்
தமிழ் வாணன்https://minkirukkal.com/author/tamilvanan/
மகாதேவப்பட்டிணம்,எனும் கிராமத்தில் விவசாய குடும்பத்தை பின்புலமாக கொண்ட நான். இயந்திரவியலில் இளங்கலை பட்டம் பெற்று .தற்போது கப்பல் சார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருக்கிறேன். Msg: நடிப்பு,கவிதை,கதை எழுதுவதில் ஆர்வமுண்டு. அவ்வப்போது அதற்கான முயற்சியையும் செய்து வருகிறேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -