யமுனா வீடு

தொடர் கவிதைகள் - 8

- Advertisement -

யமுனா
ஒருமுறை அழைத்தாள்
ஒன்றைப் பற்றிச் சொல்ல.
மறுமுறையும் அழைத்தாள்
இன்னொன்றைப் பற்றி
அவங்க அப்படிச்சொல்லிட்டாங்க
என்று மகிழ்ந்து என்னையும் மகிழ்த்திக்கொண்டிருப்பாள்

உனக்கொரு
மகிழ்ச்சியைத் தருகிறேன் என்று
மூடிய கைகளை விரித்துக் காண்பிப்பாள்.
பட்டாம்பூச்சியா பறக்கப்போகிறது?
என்றிருந்த எனக்கு
மருதாணிப் புள்ளியாய்ச் சிரிப்பாள்.

ஏய் என்ற அவளின் குதூகலத்தில்
என்னவென்று புரிவதற்குள்
அவள் பேச்சாய் இழுத்துச்செல்வாள்.

இப்படித்தான் ஒவ்வொருநாளும்
பல மகிழ்ச்சி அவளுக்கு
அதில் ஒன்றாய் எனக்கு
வண்ணங்களை மடித்துக் காண்பிப்பாள்

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

2 COMMENTS

  1. வண்ணங்களை மடித்துக் காண்பிப்பாள், மருதாணியாய்ச் சிரிப்பாள் – ரொம்ப நல்ல கற்பனை நீதி. கவிதை நல்லாருக்கு???❤???

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -