வரிசை

கவிதை

- Advertisement -

கூட்டம் அதிகமில்லை
அர்ச்சகர் அபிஷேகத்திற்கு
ஆயத்தமாக
திருநீற்றுக் கிண்ணம்
அனைவருக்கும்
பாப்பா முன்னேற
இணையர் சொன்னார்
‘முன்னாலிருப்பவரைத் தொந்தரவு
செய்யாமக் கும்பிடனும்’
ஊசி பாசி விற்கும் பெண்
கும்பிட்டு நகர
‘நம்மாளுங்க காத்திருக்கினுமா?’
என்றார் ஒருவர்
யுகங்களாய்க் காத்திருக்கும்
அவர்கள் இன்னமும்
வரிசையில்

கண்ணன்
கண்ணன்https://minkirukkal.com/author/vkannan/
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். வேலை பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில். முதல் கவிதை நவீன விருட்சத்தில் 30வருடத்திற்கு முன்பு. செந்தூரம் இதழில் "பூனை புராணம்" கவிதை, தாய் மின்னிதழில் "பந்தி விசாரிப்பு" கவிதை வெளியாகி உள்ளது. இவருக்கு வாசிப்பது, இசை கேட்பது, கிரிக்கெட் பார்ப்பது, நல்ல ஓவியங்களை ரசிக்க, பயணம் செய்ய மிகவும் பிடிக்கும்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -