யமுனாவீடு -50

தொடர் கவிதைகள்

- Advertisement -

நீயே நிரப்பிக்கொள் என்று
தூரத்தில் ஒளிர்ந்துகொண்டிருந்து
தீபம்

முழுநிலவு பார்த்துக்கொண்டிருக்க
யாருமற்ற வெளியில் அமர்ந்திருந்தேன்

நிறைய மனிதர்கள்
வந்து செல்கிறார்கள்
எல்லோருடைய இருப்பையும்
வேடிக்கை பார்க்கிறேன்

சிறுமியைப்போல
சின்னஞ்சிறிதாய் ஒளிரும்
தீபத்தில்
நீ தெரிகிறாய்

நினைவூட்டுவதற்காக
திருக்கோவில் மணி
ஒலிக்கிறது
கடற்பரப்பில் எழுந்து நிற்கிறேன்

கொஞ்சம் தடுமாறுகிறேன்
தழுவிச்செல்லும்
குளிர்ந்த காற்றில்
உன் கருணை

உன்னுடைய நினைவோடுதான்
பரபரப்பான இந்த நகரத்தில்
ஒவ்வொரு நாளையும்
துவங்கவேண்டும்

உணர்ந்துகொண்டேன்
இது விலகுதல் இல்லை
உனதன்பில் ஆழ்ந்துபோதல்
நீ கடல் பார்க்கவே
காத்திருக்கிறேன் யமுனா.

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

2 COMMENTS

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -