யமுனா வீடு – 47

தொடர் கவிதை

- Advertisement -

யமுனா தான் என்றில்லை
யாரிடம் என்னைப் பற்றி கேட்டிருந்தாலும்
அப்படித்தான் சொல்லியிருப்பார்கள்

ஒரு நதிக்கு அழைத்துச் சென்று
அவளிடம் கற்களைக் கொடுத்து
தண்ணீருக்குள் எறியச்சொன்னேன்

கற்களின் எடைக்கு தகுந்தவாறு
அவளின் முயற்சியும் வீச்ச்சும் இருக்கக் கண்டேன்

கற்கள் எழுப்பிய சப்தத்திற்கு காது கொடுத்து
அவை உருவாக்கிய அலைகளின் மீதேறி பயணப்பட்டேன்

அடுத்த முறையும்
நீர்நிலையைப் பார்க்க
அழைக்காதே என்றவள்
சமுத்திரமாக எழுந்து நின்றாள்

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -