ஒரு தேநீர் கோப்பையை வைத்துக்கொண்டு
யோசித்துக்கொண்டிருந்தாய்
மெல்லப் பருகச்சொன்னேன்
தேநீரை குடித்து முடிக்கும் நேரம்
பிரார்தனைக்கு ஒப்பானது
ஆலயமணிச் சத்தம் கேட்டிருக்கும்
இந்தப்பொழுதில்
யாரோ ஒருவரின் பயணத்தில்
தீர்வுகளை எழுதிக்கொண்டிருக்கலாம்
தொலைந்த பொழுதுகளைத் தேடிக்கொண்டு வரவில்லை
நிகழும் ஒருகணத்தில்
வரையப் போகிறாய் கிளைபரப்பிய மரத்தை.
அது உனக்கான காடாக உருமாறும்
ஓர் கனவைப்போல
நிஜம் உன்னை வந்தடையும் யமுனா
நீயாக இருக்க இப்போதைக்கு இந்தத்
தேநீரைப் பருகிமுடி
யமுனா வீடு – 34
தொடர் கவிதைகள்