யமுனா வீடு – 27

தொடர் கவிதை

- Advertisement -

நீண்டதொரு பெருமழைநாள்
சன்னல் பார்த்தபடி
தேநீர் பருகிக்கொண்டிருந்த யமுனா
முகம் மேல் தெறித்த மழை நீரை
விரல்தொட்டு எடுத்து
சன்னல் சட்டங்களில் ஒற்றிப்பார்த்தாள்
குறுஞ்சிரிப்போடு
குவளைத்தேநீரை வெளியே நீட்டி
ஒவ்வொரு சட்டங்களாக கடந்துகொண்டிருந்தவளின் கண்களில்
மேகம் பார்த்தேன்
புளோக் 650 – ல்
தேநீர் பருகிக்கொண்டு
நிலவு மறைய பார்த்துக்கொண்டிருந்தேன்
எந்தச் சன்னல் சட்டகம்
இந்த நிலவை உள்ளிழுத்துக்கொள்ளுமோ
அந்த மனதில்
அவளின் அருகில்
இரு குவளைத்தேநீரை பருகிக்கொண்டிருப்பதுபோன்ற
புதிய கனவொன்று பிறக்கலாம்
இந்தக்கனவு தள்ளிப்போககூடாது

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -