இந்தக் கோடைக்கு
சன்னலை திறந்து வைத்திருந்தேன்
மழையில்லாத இரவு
அறைச்சுவரின் வெம்மை அவள்மீதும் படர்ந்திருந்தது
இந்தப்பொழுதை புரிந்துகொள்ள முடியாதவளாக உறக்கம் கலைந்தவள்
உள்ளறைக்குள் சற்றே நடந்து பார்த்தாள்
இந்தக்கணத்தில் எதுவும் நடந்துவிடக்கூடுமென்ற நடை
அதிகமாக வியர்க்கச்
செய்திருந்தது
அவளை நோக்கி எதோ வருவதாகவே நினைவு சுற்ற
உடலைத் திறந்து பார்ப்பது போல
தொட்டுத் தொட்டுப் பார்த்தாள்
உச்சந்தலையில் ஒருவித சுமை
கை விரல்களை நீவிவிட்டாள்
வெளியறைக்கு வந்து சாய்விருக்கையில் சற்றே
குழந்தையைப்போன்று உடலைக்குறுக்கி அமர்ந்தவள்
பிறகொரு வேளையில்
அந்தரத்தில் சுற்றத்தொடங்கினாள்
இந்த இரவு சற்றுநேரத்தில் கடந்துவிடும்
தனிமையில் யமுனா
யமுனா வீடு – 30
தொடர் கவிதை