யமுனா வீடு 82

தொடர் கவிதை

- Advertisement -

பித்துநிலையிருப்பவனின்
இரவிற்குள்ளே
அழகானதொரு கனவு
யமுனா நீ
நிதானமாக உறங்கிக்கொண்டிருந்தாய்

மௌனம் கலைத்து
நடக்கத்தொடங்கியவனுக்கு
எல்லாத் தெருக்களும்
பழகியிருந்தன

இறைத்தூதர் வருகையில்
நீங்கள் எழுந்து நிற்கிறீர்கள்
மனம் பேரிரைச்சலிடுகிறது
யார் இந்த நேரத்தில்
காணமல் போகிறார்கள் ?

கண்விழித்த நிலைக்குத்
திரும்புதல் தானமிடும்
நீண்டதொரு முத்தத்தில் இருக்கிறது
மண்டியிட்டுப் பெற்றுக்கொள்

கொடுத்த முத்தத்தை
எடுக்காது இருக்கும்
ஓர் இரவில்
யமுனா நீ
கால்தடங்கள் பதிய
வனத்தினுள் அழைத்துச்செல்கிறாய்.

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -