ஓர் இரவில்தான்
அற்புதம் நிகழும்
கண்களைத் மூடித்
திறந்து பார்
ஒற்றைச் சிறகு
விழுந்து கிடக்க
பொறுமையோடு
கையை நீட்டு
நேரம் கிடைத்தால்
யாருக்காவது அழை
தயக்கமின்றி பேசு
ஊஞ்சலை ஆட்டிவிடு
வாழ்க்கையின் போக்கில்
நடந்துசெல்லும் உன்
பாதத்தில் சிறகு முளைக்கும்
பறக்கத் தயாராக இரு
பறவையாகும் நீ
வான் நோக்கி பறக்கிறாய்
ஒரு வேளை நீ
கடல்பார்க்கலாம்
உள்ளொளி வெளிச்சத்தில்
வார்த்தைகள் வருவதில்லை
சத்தமில்லாமல் விசும்பு
அரவணைக்கும் கை யமுனாதான்