நான்காம் பரிமாணம் – 98

20. ஒருமை அதிகாரம் - 3ஆம் பகுதி

- Advertisement -

ந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

நான்தான் காலம் பேசுகிறேன். ஒருமை அதிகாரத்தில் உங்கள் வாழ்வுக்கு ஒருமைக்கும் உள்ள தொடர்பை சென்ற பகுதியில் விளக்கிக் கூறினேன். ஒருமைக்கும் இருமைக்கும் உள்ள தொடர்பை இந்த பகுதியில் விளக்கமாக கூற போகிறேன். ஆரம்பிக்கலாமா?

ஒன்றும் பூஜ்ஜியமும்

ஒன்று என்னும் சொல் தனித்திருக்கும் எந்த ஒரு பொருளின் அடையாளமாக விளங்குகிறது. ஆதிகாலத்தில் மனிதன் எந்த ஒரு பொருளையும் எண்ணுவதற்கு ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு கோடு வரைந்து அதனை குறிப்பிட்டு வந்தான். உதாரணமாக 10,000 கற்களை எண்ண வேண்டும் என்றால் பத்தாயிரம் கோடுகள் வரைந்து அதனை குறிப்பிட்டு வந்தான். இதில் உள்ள மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் 10,000 கூடுகளை எண்ணுவதற்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது பிடிக்கும். இதனால் மற்றவர்கள் அதனை படிப்பது என்பது மிகவும் சிக்கலான காரியமாக இருந்தது. இதனை சுருக்கமாக எழுதுவதற்கு ரோமானியர்கள் அவர்களுடைய எங்களை கண்டு பிடித்தால் கூட அதிலும் சில நடைமுறை சிக்கல்கள் இருந்தன. ரோமானியர்கள் கூட்டல் கழித்தல் போன்ற எந்த ஒரு செயலையும் செய்வது எளிதான காரியமல்ல. இவை அனைத்தையும் இயக்குவதற்கு தேவையான ஒரே ஒரு எண் 0 மட்டும் தான். அதுவரை உலகத்தில் இல்லாத 0 என்ற எண் இந்திய தத்துவஞானிகளால்  கண்டுபிடிக்கப்பட்டது. அதுவரை எண்ணவோ அழைக்கவோ முடிந்த ஒரு அளவை மட்டும் தான் வரிசைப்படுத்தி இருந்தார்கள். மதிப்பே இல்லாத ஒரு எண்ணை எதற்கு உருவாக்க வேண்டும்? இதற்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய தத்துவம் அடங்கியுள்ளது.

இந்த அண்டம் உருவாகிய பொழுது ஒரே ஒரு கோளமாக ஒன்றிணைந்து இருந்த அனைத்துப் பொருட்களும் பிரிய ஆரம்பித்தது அல்லவா? ஒரு பொருள் எப்போது இரண்டாகப் பிரிய ஆரம்பிக்கிறதோ அப்பொழுதே தனியாகப் பிரிந்த ஒவ்வொரு துண்டும் மீண்டும் இரண்டாக பிரிவதற்கான வாய்ப்பு கூட உருவாகிறது. இப்படி தொடர்ச்சியாக இரண்டாக பிரிந்து கொண்டே வந்தால் எண்ணிலடங்கா எவ்வளவு சிறிதாக வேண்டுமானாலும் பிரிந்து கொண்டேன் போகலாம். அப்படிப் பார்த்தால் இந்த உலகில் மொத்தமே இரண்டு எண்கள் தான் உள்ளன. முதலில் பிரிவே இல்லாத 0 என்னும் எண். அதன்பின்பு ஒரு முறை பிரிவதை குறிப்பதற்கு ஒன்று என்ற எண். இந்த இரண்டு எண்களை மட்டும் வைத்துக்கொண்டு எவ்வளவு பெரிய ஒரு எண்ணையும் உங்களால் உருவாக்க முடியும். இந்த அடிப்படைத் தத்துவத்தை வைத்துக்கொண்டுதான் உங்களுடைய மொத்த விஞ்ஞானமும் மெய்ஞானமும் வளர்ந்தது. உதாரணமாக, உலகில் அடிப்படையாக இருப்பது ஒரு தத்துவமா இல்லை இரண்டு தத்துவங்களா என்னும் அடிப்படைக் கேள்வியிலிருந்து தான் உங்கள் உலகில் உள்ள அனைத்து மதங்களும் உருவாகின. பிரிவற்ற நிலையாகிய 0 மற்றும் விரிவடையும் நிலையான ஒன்று ஆகிய இரண்டு எண்களை மட்டும் வைத்துக் கொண்டுதான் உங்களுடைய நவீன விஞ்ஞானம் கணிப்பொறி என்னும் ஆற்றலை கண்டுபிடித்து அதன் மூலம் எல்லையில்லா பயன்பாடுகளை அனுபவித்துக் கொண்டு வருகிறது. நீங்கள் கேட்கும் பாடல் அல்லது பார்க்கும் படம், விளையாடும் விளையாட்டு, பதிந்து வைக்கும் கோப்பு என்று எதுவாக இருந்தாலும் உங்கள் கணிப்பொறிக்கு தெரிந்த ஒரே மொழி 0 மற்றும் 1 மட்டும்தான். இவை இரண்டையும் வலைப்பின்னல் போல் மாற்றி மாற்றி எந்த ஒரு செயல்பாட்டை முங்களால் குறிப்பிடமுடியும்.

நான் மேற்கூறிய நிகழ்விலிருந்து உங்களால் ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். ஒருமை என்னும் நிலைமை தன்னுடைய முக்கியத் துவத்தை உணர்த்துவதற்கு இருமை என்னும் பிரிவு நிலை தேவைப்படுகிறது. அதுபோலவே இருமை எனும் நிலைமை பொறுமையால் மட்டும்தான் தன்னுடைய இயல்பை அனைவருக்கும் புரிய வைக்கிறது. பகலிரவு, வெப்பம் தட்பம், உயர்வு தாழ்வு, தொடக்கம் முடிவு, என்று உங்கள் வாழ்வில் அன்றாடம் நடக்கும் எந்த ஒரு நிகழ்வும் இருமை என்னும் நிலையில் தொடங்கி ஒருமை என்னும் நிலையை அடையும் பொழுது அது ஒரு முடிவான நிலைக்கு வருகிறது. அப்படியானால் ஒருமை என்றால் செயல்படாத நிலைமையா என்று உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம். இதற்கான பதிலை அடுத்த பகுதியில் கூறுகிறேன். அதுவரை காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

1 COMMENT

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -