நான்காம் பரிமாணம் – 73

15. இருமை அதிகாரம் - 3ஆம் பகுதி

- Advertisement -

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்


நான்தான் காலம் பேசுகிறேன். காலம் என்னும் நான் இருமை அதிகாரத்தில் இருமைக்குள்ளே இருக்கும் ஒற்றுமையைப் பற்றி இந்த இரு பகுதிகளாக பார்த்தோம்.  ஆனால் உள்ளே இதற்குள்ளே பல்வேறுவிதமான முரண்பாடுகளும் உள்ளன. அவை என்னவென்று இந்த பகுதியில் பார்ப்போம்.

முரன்பாட்டின் ஆணிவேர்


முரண்பாடு என்றால் என்ன?  தோற்றத்துக்கு ஒரு நிலைப்பாடும் செயல்பாட்டுக்கு வேற ஒரு நிலைப்பாடும் கொண்டிருந்தால் முரண்பாடு என்று கூறுகிறீர்கள்.  உங்கள் கருத்துக்கு முரண்பட்ட எண்ணம் கொண்ட அனைவருடனும் நீங்கள் இயல்பாகவே விலகிச் செல்வீர்கள் தாமே? ஆனால் நீங்கள் அவ்வாறு நடந்து கொள்வதே ஒரு விதமான முரண்பாடுதான் என்பது உங்களுக்கு தெரியுமா? இதனைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் ஒரு சிறிய காந்தத் துண்டை எடுத்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு காந்தத்துக்குள் வட துருவம் மற்றும் தென் துருவம் இருக்கும். அதனை நீங்கள் இரண்டு துண்டாக உடைக்கும் பொழுது வட துருவமும் தென் துருவமும் தனித்தனியாக போய்விட வேண்டும் அல்லவா? ஆனால் அப்படி உடைந்த ஒவ்வொரு துண்டும் தனக்குள் மீண்டும் ஒரு வட துருவத்தையும் தென் துருவத்தையும் உருவாக்கிக்கொள்ளும்.  இந்த உடைந்த காந்தத்தை இப்படி தொடர்ச்சியாக இன்னும் சிறிதாக எவ்வளவு வெட்டினாலும் புதிதாக உருவாகிய சிறிய துண்டுக்கு ஒரு தனியான வட துருவமும் தென் துருவமும் இருக்கும். உடையாமல் இருக்கும் பொழுது வட துருவமாக இருந்த ஒரு பகுதி உடைந்த பின்பு தென் துருவமாகக் கூட உருவெடுப்பதை உங்களால் பார்க்க முடியும். இதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் எந்த ஒரு காந்தத் துகள்ளுக்கும் வடதுருவம் அல்லது தென் துருவம் என்ற ஒரே பண்பு கிடையாது. மாறாக அதற்கு அருகில் இருக்கும் பொருட்களின் தன்மை கொண்டு தன்னை வட துருவமாகவும் தென் துருவமாகவும் வெளிக்காட்டிக் கொள்ளும்.  ஒரு சிறிய இயற்கையான காந்தத்திற்கே இவ்வளவு முரண்பாடு இருந்தால் பரிணாம வளர்ச்சியில் மிகவும் வளர்ச்சியடைந்த  உங்களுக்கும் எவ்வளவு முரண்பாடுகள் இருக்கும்? நீங்கள் வசிக்கும் மொத்த உலகமும் ஒரு விதமான காந்தம் தான். இதனால்தான் வடக்கு-தெற்கு போன்ற திசைகளை தனியாக உங்களால் அளக்க முடியாது. 

சரி இதற்கும் இருமைக்கும் என்ன சம்பந்தம்?  முரண்பாடு என்பதன் மற்றொரு வடிவம் தான் இருமை. இதனை அறிவுப்பூர்வமாக தெரிந்து கொள்வதற்கு நீங்கள் நியூட்டனின் மூன்றாவது விதியை படித்துப் பார்க்கலாம். எந்த ஒரு செயலுக்கும் அதற்கு சமமான ஒரு எதிர்மறை செயல் எப்போதும் இருக்கும். ஒருவரை நீங்கள் தள்ள முயற்சி செய்தால் அவர் எந்த அளவிற்கு அழுத்தத்தினால் விலகிப் போகிறாரோ அதற்கு சரிசமமான எதிர்மறை இசை உங்கள் மேலும் செயல்பட்டு உங்களையும் வேறு ஒரு பக்கத்தில் தள்ளிவிடும். இதே கோட்பாட்டின் அடிப்படையில் தான் விண்வெளி ஊர்திகளும் செயல்படுகின்றன. இதன் அடிப்படை என்னவென்றால் எதிர்மறை வினை புரியாத எந்த ஒரு செயலையும் உங்களால் செய்ய என்றுமே முடியாது. அந்த எதிர்மறை சக்திகளை ஒரே புள்ளியில் தொடங்கி வெவ்வேறு திசையில் பயணிக்கும். இந்த இரு சக்திகளும் ஒன்றோடொன்று மோதிக் கொண்டால் எப்பொழுதுமே மிஞ்சுவது ஒன்றுமில்லாத பூஜ்ஜியம் தான். ஆனால் அவை இரண்டும் எதிர் திசையில் பயணம் செய்வதால் இது திசைகளிலும் புதிய சக்தி உருவாகிறது. அப்படியானால் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளாமல் இயங்கும் அனைத்து முரண்களால் மட்டும்தான் இந்த மொத்த உலகமும் இயங்குகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். இருமை இல்லையென்றால் உங்கள் வாழ்வில் புதிதாக எந்த ஒரு முயற்சியையும் நீங்கள் எடுக்கவில்லை என்று புரிந்து கொள்ளலாம். 

இருமை கோட்பாடு தூலமான பொருட்களுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. உங்கள் அறிவாற்றல் கூட இதனைக் கொண்டுதான் இயங்குகிறது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? வெயில் அதிகமாக இருக்கும் காலத்தில் உயர்ந்த நிலையை உங்கள் உடல் கேட்கிறது. ஆனால் அதே சமயத்தில் பனிக்காலத்தில் நீங்கள் வெப்பத்தை எதிர்பார்க்கிறீர்கள். இந்த இரண்டையும் ஒன்றாக செயல்படுத்தும் முயற்சியை தொடங்கினால் தோல்வி நிச்சயம் என்பதை நீங்கள் உணர்வீர்கள். அதற்கு காரணம் உங்கள் முழு மூளையும் இருமையை அடிப்படையாகக் கொண்டுதான் கட்டமைக்கப்பட்டுள்ளது. அது எப்படி என்று அடுத்த பகுதியில் கூறுகிறேன், அதுவரை காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -