சொல்லாடும் முன்றில் – 1

- திங்கள் கூடுகை 1 , சிங்கப்பூர்

- Advertisement -

ன்புடையீர் வணக்கம்

‘சொல்லாடும் முன்றில்’:- ஜூராங் மேற்கு நூலகத்தில் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைதோறும் இலக்கியப் பகிர்வுக்கான களமாக இவ்வமைப்பு இயங்கவிருக்கிறது.

தமிழ்மொழி உலகெல்லாம் புலம்பெயர்ந்து தன் படைப்புகளைத் தந்து கொண்டிருக்கின்றது. நமது சிங்கைவாழ் தமிழர்களின் படைப்புகளும் பரவலாகப் பொதுவெளியில் அறிமுகமாகி வருகின்றன.

அத்தகைய படைப்புத்திறன் உள்ள நமது மொழியை வளப்படுத்தவும் தக்க வைத்துக் கொள்ளவும்
‘சொல்லாடும் முன்றில்’ இலக்கிய அமைப்பின் சார்பாக மாதந்தொறும் சிங்கப்பூர்ப் படைப்பாளிகளின் கவிதைகள் போட்டிக்கென உற்சாகத்துடன் வரவேற்கப்படுகின்றன. சிறந்த கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு
அதற்கான பரிசில் தொகையையும் மாதந்தொறும் வழங்க இருப்பதை மகிழ்வுடன் அறிவித்துக் கொள்கிறோம்.

குறிப்பாக, இம்மாதக் கவிதைகள் சிங்கப்பூர்ச் சூழலோடு பொருந்துவதாய் இருப்பது நலம். பணிச்சூழல், பயணம், தத்தம் அன்றாட நிகழ்வுகள் எதுவாயினும் அவரவர் பார்வையிலான கவிதைகளை அனுப்பலாம்.. சிறந்த நடுவர்கள் கவிதைகளைத் தேர்ந்தெடுக்க உள்ளனர். அவை பின்னர் நூலாகவும் தொகுக்கப்படலாம்

ஆர்வம் உள்ளவர்களைக் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

குறிப்பு
1.கவிதைகள் 20 வரிக்குள் இருக்க வேண்டும்.
2.ஆகஸ்ட் 12ஆம் தேதிக்குள் கீழே குறிப்பிட்டிருக்கும் மின்னஞ்சலுக்கு யுனிகோட் எழுத்துருவில் MS word மற்றும் PDF ஆக இரண்டு முறையிலும் அனுப்பவும்.

தொடர்பிற்கு
82377006
sollaadummuntril@gmail.com

நிகழ்ச்சிநிரல்

  1. நூலகத்தில் உள்ள ஒரு சிறுகதைத் தொகுப்பு அறிமுகம் ( 5 நிமிடம் உரை 10 நிமிடம் கலந்துரையாடல்)
  2. ஒரு தலைப்பில் பார்வையாளர் உரை ( 10 நிமிடம்)
  3. முன்கூட்டியே கொடுக்கப்பட்ட காட்சி / செய்திக்குக் கவிதை எழுதியவர்கள் நேரில் வந்து படித்தல்.( 30 நிமிடம்) இயன்றவரை பிறமொழிக் கலப்பில்லாமல் எழுதப் பயிலல்.

4.பார்வையாளர்களுக்கு இருக்கும் பிற திறமைகளைப் பகிர்தல் ( 15 நிமிடம்)

  1. குழந்தைகளுக்கான பகுதி ( கதை சொல்லுதல் 15 நிமிடம்)
  2. குழந்தைக்களுக்கு இருக்கும் பிற திறமைகளைப் பகிர்தல் ( 15 நிமிடம்)

முகநூல் பக்கம் : சொல்லாடும் முன்றில் முகநூல் பக்கம்

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -