செண்பகமரம்

கவிதை

- Advertisement -

செண்பகமரம்

வான் தொடும் உயரம்

கர்வத்துடன் மற்றவை நோக்கி

தலைகுனிந்து சிரிக்கும்

வளரும் கவனத்தில்

பூவை மறந்தது

கடைசித் தருணமறிந்து

கேட்டது என்னிடம்:

‘பூ வைக்கலன்னுதான வெட்டற?’

‘ஏன் இப்படியெல்லாம் பேசுற?’

திருப்பிக் கேட்டபடி

விழி துடைத்து வீட்டில்

நுழைந்தேன்

எப்படிச் சொல்வேன் அதுவும்

ஒரு காரணம் என்று?

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

கேட்காத கேள்வி

வயிற்று வலியால்

மண்ணெண்ணையில்

குளித்த பத்மாஅத்தை படிக்க

விரும்பியது ஆசிரியர் பயிற்சி

‘பொட்டப்புள்ளைக்கு எதுக்குக்

கட்டடப் படிப்பு?’ அம்மாவால்

இணையருக்குப்

வாய்த்தது பொருளாதாரம்

‘ஒன்பதாவது படிச்சப்

பொண்ணக் கல்யாணம்

பண்ணி வெச்சுட்டாங்க’

ஆதங்கப்பட்ட அம்மா

‘தொடர்ந்திருந்தால்

என்னவாகியிருப்பாய்?’

அம்மாவும் சொன்னதில்லை

யாருமே கேட்கவில்லை

கடைசி வரை

கண்ணன்
கண்ணன்https://minkirukkal.com/author/vkannan/
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். வேலை பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில். முதல் கவிதை நவீன விருட்சத்தில் 30வருடத்திற்கு முன்பு. செந்தூரம் இதழில் "பூனை புராணம்" கவிதை, தாய் மின்னிதழில் "பந்தி விசாரிப்பு" கவிதை வெளியாகி உள்ளது. இவருக்கு வாசிப்பது, இசை கேட்பது, கிரிக்கெட் பார்ப்பது, நல்ல ஓவியங்களை ரசிக்க, பயணம் செய்ய மிகவும் பிடிக்கும்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -