அப்பாவின் தம்பி

கவிதை

- Advertisement -

நடுவகிடு
படியவாரிய சிகை
மழித்த முகம்
பார்த்ததில்லை நேரில்
சொல்லக் கேட்டிருக்கிறேன்
பேருக்கேற்ற குணம்
தயாளன்
கைநீட்டி அடித்த தாத்தா
வீடு திரும்புகையில்
ஊரார் திரண்டு வந்து
மேலிழுத்துப் போட்டனராம்
தலை தலையாய்
அடித்துக்கொண்டு
வாய்வைத்து உறிஞ்சிக்
குடித்தாராம்
உதிரம் குடித்து
உயிர் எடுத்தாள்
காளி
உறிஞ்சிக் குடித்து
உயிர் எழுப்பித்
தோற்றார் தாத்தா

கண்ணன்
கண்ணன்https://minkirukkal.com/author/vkannan/
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். வேலை பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில். முதல் கவிதை நவீன விருட்சத்தில் 30வருடத்திற்கு முன்பு. செந்தூரம் இதழில் "பூனை புராணம்" கவிதை, தாய் மின்னிதழில் "பந்தி விசாரிப்பு" கவிதை வெளியாகி உள்ளது. இவருக்கு வாசிப்பது, இசை கேட்பது, கிரிக்கெட் பார்ப்பது, நல்ல ஓவியங்களை ரசிக்க, பயணம் செய்ய மிகவும் பிடிக்கும்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -