வாழ்க்கை விநோதம்

நூலாசிரியர்: திரு அழ. வள்ளியப்பா

- Advertisement -

ஆசிரியர் : அழ. வள்ளியப்பா

கிண்டில் பதிப்பு

திரு அழ. வள்ளியப்பா எழுதிய பல குழந்தைப் பாடல்களை நாம் ரசித்திருப்போம். இது அவர் எழுதிய நகைச்சுவைக் கட்டுரைகளின் தொகுப்பு. தமிழ்நாட்டின் சில பிரபல நகைச்சுவை எழுத்தாளர்களைப் போல தாமும் எழுத வேண்டும் என்கிற ஆசை அழ.வள்ளியப்பாவிற்கு எழ, இவர் கைகட்டிக் கொண்டு இருந்தாலும் ஆசையானது விடாமல் துரத்தி இந்தக் கட்டுரைகளை எழுதத் தூண்டியுள்ளது. பெரும்பாலான கட்டுரைகள் ‘ சக்தி ‘ யிலும் ‘ தொழிலாளர் உலக ‘ த்திலும், 1940 லிருந்து, ( யுத்த காலத்தில் ) எழுதப்பட்டவை.

13 தலைப்புகளில் அமைந்துள்ளன கட்டுரைகள். சொந்த அனுபவங்கள் சிலவற்றையும் சில நடைமுறைகள் குறித்த தனது கருத்துகளையும் தனது ரசம் மிகுந்த எழுத்தில் பதிவு செய்துள்ளார் அழ.வள்ளியப்பா.

அவர் கூறியிருக்கும் பல விஷயங்கள் இன்று வழக்கற்றுப் போயிருந்தாலும் அன்று எவ்வாறு அவை நடைமுறையில் இருந்தன என்பதைப் படிக்க சுவாரஸ்யமாகவே இருக்கிறது. உதாரணத்திற்கு சலவைத் தொழிலாளி பற்றிய கட்டுரையையும் கரிக்காருடனான அவரது அனுபவத்தையும் சொல்லலாம். அன்றைய கரிக்கார்கள் பற்றித் தெரிந்து கொள்ள வேறு சான்று தேவையில்லை. காளமேகப் புலவர் ஸ்டைலில் அவர் எழுதிய கீழ்க்கண்ட பாடலைப் படித்தாலே போதும்.

” கார்என்று பேர்படைத்தாய்,
கரியாலே வாழ்கின்றாய்,
சேரிடம் அறிந்து சேர்க்காய்,
‘ சீக்கிரம் ‘ உணர மாட்டாய்,
தார்ரோட்டில் நின்று கொண்டு,
தள்ளிட வழியும் வைத்தாய்.
பாரினில் யாரிடம் போய்ப்
பட்டஎன் அவஸ்தை சொல்வேன்! “

வெள்ளைக்காரர்களின் மூட நம்பிக்கைகள் பேசும் கட்டுரையும் சுவையானது. வெள்ளிக்கிழமையையும் 13ம் நம்பரையும் அவர்கள் வெறுப்பதை கூறும்போது நமக்கு வயிறு நோகிறது.

அவரே முன்னுரையில் குறிப்பிடுவது போல பொழுபோக்கிற்கு உபயோகமாக இருக்கும். ஒருமுறை படித்துப் பார்த்துச் சற்று இளைப்பாறலாம்.

இந்துமதி மனோகரன்
இந்துமதி மனோகரன்https://minkirukkal.com/author/indumathi/
சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் பேரார்வம் உடையவர். இவர் எழுதிய பல சிறுகதைகள் கல்கி, கணையாழி, வாரமலர், தமிழ்முரசு, மக்கள் மனம் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -