வரலாற்றுச் சிறுகதைப் போட்டி – 2022

மூன்றாம் ஆண்டு தொடக்க விழா

- Advertisement -

அன்பு வாசகர்களே,

இன்று மின்கிறுக்கல் மின்னிதழ் தன்னுடைய இரண்டு ஆண்டுப் பயணத்தை இனிதே நிறைவு செய்துகொண்டு மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இணையம் முழுவதும் வலைப்பதிவுகளும் பின்னூட்டங்களும் நிறைந்திருக்கும் காலகட்டத்தில் தனக்கே உரிய பல்சுவைப் பதிவுகளை வெளியிடுவதில் மின்கிறுக்கல் தனக்குரிய இடத்தை பிடித்துவிட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறது. இந்தப் பெருமை அனைத்தும் வாசகர்களாகிய உங்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் மட்டுமே உரித்தானது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 600-க்கும் மேற்பட்ட தரமான பல்சுவைப் பதிவுகள் நமது வலைப்பக்கத்தில் வந்துள்ளன. கடந்த ஆண்டு மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாகக் கட்டுரைப் போட்டியை அறிவித்து மாணவர்களை ஊக்கப்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நல்ல வேளையில் தமிழ் மொழிக்குச் சிறப்பு சேர்த்த அனைத்து சங்கக் கால வரலாற்று ஆசிரியர்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக ஒரு புதுவிதமான போட்டியை அறிவிக்கிறோம்.

வரலாற்றுப் பின்னணி கொண்ட எந்த ஒரு நிகழ்வையும் அடிப்படையாக எடுத்துக் கொண்டு தங்களுடைய கற்பனையைக் கலந்து சிறுகதை புனைய விருப்பமுள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.

போட்டியின் விதிமுறைகள் பின்வருமாறு:

 • சரித்திரக் கதைகளுடன் பின்னிப்பிணைந்த தங்கள் கற்பனைக் கதையை 2000 வார்த்தைகளுக்குள்  எழுத வேண்டும்.
 • Unicode தமிழ் வடிவத்தில் .docx, .rtf, .txt கோப்புகளில் ஏதேனும் ஒரு வகையில் மின்னஞ்சலில் இணைத்து அனுப்ப வேண்டும்.
 • ஒருவர் எத்தனை கதைகளை வேண்டுமானாலும் அனுப்பலாம். வயது வரம்பு எதுவும் கிடையாது. உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டும் இந்தப்போட்டியில் பங்கு கொள்ளலாம். (வெற்றியாளர்களுக்குப் பணம் இந்திய வங்கிக் கணக்கில் மட்டுமே செலுத்தப்படும்)
 • கூடுமானவரை தங்களுடைய கதையில் எந்த ஓர் ஆங்கிலச் சொல்லோ பிறமொழிச் சொல்லோ கலக்காமல் தமிழ் மொழியில் எழுதுவது சிறப்பு.
 • கீழ்க்கண்ட உறுதிமொழியை மின்னஞ்சலுடன் இணைப்பது அவசியம்.

“இக்கதையை போட்டி முடிவு வெளியாகும் வரை வேறு எந்த இதழுக்கோ அல்லது அச்சிற்கோ அல்லது டிஜிட்டல் வடிவிலோ அனுப்ப மாட்டேன்.

இது ஏற்கனவே அச்சிலோ, மின்னிதழிலோ, கிண்டில் அல்லது ஆடியோ புக் என எவ்வித வடிவத்திலும் வெளிவராத படைப்பு என்றும் உறுதிளிக்கிறேன்.

மேலும் இந்தப் படைப்பானது எனது சொந்தக் கற்பனையில் உருவானது என்றும் அது எவ்வித மொழிபெயர்ப்போ அல்லது தழுவலோ அல்ல என்கிற உறுதிமொழியையும் அளிக்கிறேன்.”

 • வெற்றி பெறும் போட்டியாளர்களின் கதை அனைத்தும் எழுத்தாளரின் புகைப்படம் மற்றும் சிறு குறிப்புடன் மின் கிறுக்கல் தளத்தில் வெளியிடப்படும். சிறுகதையை அனுப்பும் போட்டியாளர்கள் அனைவரும் மின்னஞ்சலில் சிறுகதையுடன் தங்களுடைய புகைப்படம் மற்றும் சிறு குறிப்பையும் சேர்த்து அனுப்பும் படி கேட்டுக்கொள்கிறோம்.
 • தங்களுடைய படைப்பை “வரலாற்றுச் சிறுகதைப் போட்டி – 2022” என்னும் தலைப்புடன் [email protected] எனும் மின்னஞ்சலுக்கு நவம்பர் 15 2022 டிசம்பர் 04 2022 க்குள் அனுப்பவேண்டும். 
 • வெற்றி பெற்ற கதைகளை பரிசீலிக்க சிறப்பு நடுவர் குழு அறிவிக்கப்பட்டு கூடியவிரைவில் வெளியிடப்படும். நடுவர்கள் மற்றும் ஆசிரியர்களின் முடிவே இறுதியானது. 
 • மொத்தப் பரிசுத் தொகை இந்திய மதிப்பில் 20 ஆயிரம் ரூபாய்கள் ஆகும். பரிசுபெற்ற கதைகள் அனைத்தும் மின்கிறுக்கல் தளத்தில் வெளியிடப்படும். 
 • முதல் பரிசு ரூபாய் 7000/-, இரண்டாம் பரிசு ரூபாய் 5000/-, மூன்றாம் பரிசு ரூபாய் 3000/- மற்றும் தேர்ந்தெடுக்கப்படும் ஐந்து சிறுகதைகளுக்கு தலா 1000 ரூபாய்.
 • தரமான சிறுகதைகள் அனைத்தும் வருங்காலத்தில் படைப்பாளியின் முழு விபரத்துடன் புத்தகமாக அச்சில் ஏற்றப்படும்.

உங்கள் கற்பனைக் குதிரை ஓட ஆரம்பிக்கட்டும். எழுத ஆரம்பித்து விட்டீர்கள் தானே???! 

– ஆசிரியர், மின்கிறுக்கல் மின்னிதழ்
மின்னஞ்சல் : [email protected]
https://minkirukkal.com/

1 COMMENT

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -