இசைமயமான முன் வழிச்சாலை

மூன்று கவிதைகள்

- Advertisement -

இசைமயமான முன் வழிச்சாலை

மேகம் கண்ணீர் விடுகிறது
நிலம் மலர்கிறது
நீயும் நானும்
வேடிக்கை பார்க்கிறோம்.

காற்றின் குளிர் தீண்டல்
சரீரங்களை சுடுகிறது
நீயும் நானும்
விலகியே நிற்கிறோம்.

குழைந்த சூழல்
பிசைகிறது
உணர்வின் மையங்களை.

எது இணைக்கும் ?
எப்படி இடைவெளி இளகும் ?

சகதி தேங்காமல்
சுற்றுப்புற இடமோ..
படிகங்களாய் பிரகாசித்தது.

நம் கைகள்
அணிச்சையாக இணைந்தன.

??????????????????????????

லோக  தகனம்

வானத்தை விண்கலங்களால்
கிழிக்கிறோம்
பூமியை துளையிடும் கருவிகளால் துளைக்கிறோம்
நீரை அசுத்தங்களால்
நாசப்படுத்துகிறோம்
காற்றை நச்சால்
நிரப்புகிறோம்
காடுகளை வெட்டி
வீழ்த்துகிறோம்
மலைகளை உடைத்து
சிதைக்கிறோம்
உயிரினங்களை தீர்க்கிறோம்
கடல்களை நெருப்பிட்டு
எரிக்கிறோம்
வாழ்வு சுடுகிறதென
புலம்பித் திரிகிறோம்.

??????????????????????????

இணையவெளி படைப்புக் காலம்

மின்னியல் பரப்பு விரிந்து கிடக்கிறது
பத்திரிக்கை அரசபீடங்கள் சரிந்து விட்டன
மகா சந்நிதானர்கள் மாய்ந்து விட்டனர்
விமர்ச்சன சாமியாடிகள் தெளியாத மயக்கத்தில் கிடக்கின்றனர்
உன் கனவுகளை படம் பிடி
உன் காயங்களை காட்டு
உன் கண்ணீரை கங்குகளாய் வடிவமை
உன் காதல்.. ஊடல்.. முயக்கம் யாவற்றையும் வார்த்தைகளாக்கு
உன் கொந்தளிப்பு எதிர்ப்பு எல்லாம் போராட்ட சித்திரங்களாகட்டும்
உன் நேசங்கள்..ஆசைகள்.. கபடங்கள்.. இயலாமைகள்..கோபங்கள்..ஆங்காரம்.. அவமானங்கள்..நம்பிக்கைகள்..
ஏமாற்றங்கள் ஆகியன புனைவுகளாய் பீறிடட்டும்
நீ வலைக் காடுகளுக்குள் வலம் வா
காலம் கைதட்டி வாழ்த்துகிறது
உன் சுவடுகள் இணைய வெளியில் ஒளிரட்டும்.

வசந்ததீபன்
வசந்ததீபன்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். தற்சமயம் சென்னை கூடுவாஞ்சேரியில் இருக்கிறார். ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். மணிப்பூரில் நாகா மலைவாழ் மக்கள் பள்ளியில் ஏழு வருடங்கள் வேலை பார்த்தார். நீண்ட காலங்களாக கவிதைகள் , கதைகள் எழுதி வருகிறார். 2021ல் "கண்ணீர் படராத ஓர் அங்குல மண்" எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. அன்பைத் தேடிக் கண்டடைவதே படைப்பாக்கமாக நம்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -